உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்

மூணாறில் மழைக்கு ஓய்வு: பயணிகள் உற்சாகம்

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் கடந்த சில நாட்களாக இருந்த மழை சூழல் மாறி நேற்று வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மூணாறில் கடந்த வாரம் தென் மேற்கு பருவமழை வலுவடைந்து தீவிர மாக பெய்தது. நடப்பு பருவ மழை சீசனில் அதிக மாக ஜூலை 26ல் 210.38 மி.மீ., பதிவானது. அன்று இரவு கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவர வியல் பூங்கா அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூணாறு அந்தோணியார் காலனியைச் சேர்ந்த கணேசன் 58, இறந்தார். அதே பகுதியில் ஜூலை 27ல் காலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழை அதிகரித்ததால் நிலச்சரிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அஞ்சினர். மழை படிப்படியாக குறைந்து நேற்று வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாட்டுபட்டி, குண்டளை அணைகளில் சுற்றுலா படகுகளில் பயணித்தனர். மாலை 4:00 மணிக்கு மேல் மேகங்கள் சூழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை