உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 21 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை

21 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை

பெங்களூரு: 'தென்கிழக்கு அரபிக்கடலில் மேல் அடுக்கு காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால், கர்நாடகாவில் 21 மாவட்டங்களில் ஐந்து நாட்கள் மழை பெய்யும் வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையத்தின் பெங்களூரு பிரிவு அறிவித்துள்ளது.அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:தென்கிழக்கு அரபிக்கடலில் தெற்கு கேரள கடற்கரையில், 3.1 கி.மீ., உயரத்தில் கடல் மட்டத்திலிருந்து மேல் அடுக்கு காற்று சுழற்சி நீடிக்கிறது. இதனால் பெங்களூரு உட்பட துமகூரு, ராம்நகர், மைசூரு, மாண்டியா, கோலார், சித்ரதுர்கா, சிக்கபல்லாபூர், சாம்ராஜ்நகர், பெங்களூரு ரூரல், யாத்கிர், விஜயபுரா, ராய்ச்சூர், கலபுரகி, பீதர், பெலகாவி, உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா உட்பட 21 மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.அத்துடன், உள் கர்நாடகாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறையும். அடுத்த 48 மணி நேரத்துக்கு அதிகாலையில் பல மாவட்டங்களில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 27 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.பெங்களூரு நகரில் நேற்று காலை முதலே, மேக மூட்டத்துடன் கூடிய வானிலை நிலவி வருகிறது. குளிரும் அதிகமாக உள்ளது. தற்போது ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.ஏற்கனவே நகரில் காய்ச்சல், சளி, இருமல் அதிகரித்து வருகிறது. தற்போது வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், மக்களின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை