உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த 5 நாட்கள் கர்நாடகாவில் மழை

அடுத்த 5 நாட்கள் கர்நாடகாவில் மழை

பெங்களூரு; அடுத்த ஐந்து நாட்கள், கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு உட்பட, மாநிலம் முழுதும் தற்போது மழை குறைந்துள்ளது. ஆனால் அடுத்த ஐந்து நாட்கள், பரவலாக கன மழைக்கு வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி அன்று, கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன. மற்ற நாட்களில் சாதாரண மழை பெய்யக்கூடும்.நாளை (இன்று) தார்வாட், கலபுரகி, யாத்கிர் மாவட்டங்களில், லேசான மழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்கள், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, மைசூரு, மாண்டியா, குடகு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.ராம்நகர், பெங்களூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராம்நகர், விஜயநகரா, தார்வாட், பீதர், பெலகாவி, யாத்கிர், கலபுரகி, சிக்கபல்லாபூர் ஆகிய மாவட்டங்களில் சாதாரண மழை பெய்யலாம். மழையுடன், காலை மற்றும் மாலை நேரத்தில் குளிரும் அதிகமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 31, 2024 21:49

எவ்வளவு மழை பெய்தாலும் பெங்களூருவில் உள்ள ஒரு சில இடங்களில் மக்கள் காவிரி தண்ணீரை பார்த்து பல மாதங்களாகிவிட்டது. குறிப்பாக பெங்களூரூவின் ராமமூர்த்தி நகர் மக்கள். கட்டுப்படியாகாமல் அதிக விலை கொடுத்து டேங்கர் மூலம் தண்ணீர் பெறுகிறார்கள். அவர்கள் வயிற்றெரிச்சல், சாபம் கர்நாடக காங்கிரஸ் அரசை சீரழிக்கும். இன்றைக்கு தீபாவளி பண்டிகை. இன்றும் தண்ணீர் விடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அரசின் அலட்சியத்தை.


சமீபத்திய செய்தி