உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்

புதுடில்லி: மத்திய தகவல் ஆணையராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜ் குமார் கோயல் நேற்று நியமிக்கப்பட்டார். மத்திய தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக்காலம், செப்., 13ல் முடிவடைந்தது. இதையடுத்து அப்பதவி காலியாக இருந்தது. புதிய தகவல் ஆணையரை தேர்வு செய்ய, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அடங்கிய தேர்வுக் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய தகவல் ஆணையராக முன்னாள் சட்ட செயலர் ராஜ் குமார் கோயலை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயலை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, ஜெயா வர்மா சின்ஹா, சுவகாட் தாஸ், சஞ்சீவ் குமார் ஜிண்டால், சுரேந்திர சிங் மீனா உள்ளிட்ட எட்டு பேர், தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் புதிய குழுவினர் நாளை பதவியேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ