உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் ஆலோசனை

முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், டில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்கை நாட்டின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது அம்பலமானது. இதனையடுத்து, அந்நாடு மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடிஉறுதி அளித்து உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முப்படைகளும் தயார் நிலையில் உள்ளனர்.இச்சூழ்நிலையில், டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவரது இல்லத்தில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பிஎஸ்எப் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Indian
ஏப் 28, 2025 17:56

அந்தக்காலம் போலஇல்லாமல் இப்பொழுது எல்லாப்பேச்சுகளும் செயல்களும் ஒரு நொடியில் உலக அளவில் பரவி விடுகின்றன. அது மட்டுமல்லாமல் சீனா போன்ற நாடுகள் நமது ஒவ்வொரு அசைவுகளையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால் இராணுவ ரகசியங்களை கிரிக்கெட் மாட்ச் போல அறிவிக்க முடியாது. இதில் நமக்கு வெற்றி கிடைக்க இறைவனை வேண்டுவோம். பாகிஸ்தான் உள்ளே நுழைந்து அங்கிருந்து மூளையாகச்செயல்படும் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டினால் இந்த தீவிரவாதம் முடிவுக்கு வரும். இந்த மிஷன்இல் நமது அரசுக்கு ஊக்கமளிக்க இறைவன் அருள் புரிய வேண்டும். வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்.


பிரேம்ஜி
ஏப் 28, 2025 07:18

இது வழக்கமான ஆலோசனை தான்! அவ்வப்போது நடக்கும். கவலைப்பட வேண்டாம்!


Ramesh Sargam
ஏப் 27, 2025 20:00

வெறும் ஆலோசனை மட்டும்தான். பாகிஸ்தான் மீது போர் தொடுப்பீர்களா.. இல்லையா... அதைப்பற்றி செய்தி எதுவும் இல்லை. ஒருவேளை ரொம்ப ரகசியமோ...?


K.SANTHANAM
ஏப் 27, 2025 18:51

இன்று அமாவாசை . அருமையான நாள். போர் தொடங்குங்க


Senthoora
ஏப் 27, 2025 17:41

நம்மை மீறி யாரும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக நுழையமுடியாது என்று, முப்படை தளபதி, ராஜ்நாத் சிங்கும் சொன்னாள்ர்கள். இப்போ சிம்பிளா 5 தீவிரவாதிகள் வந்து பொய்யாகிட்டாங்க.


புதிய வீடியோ