உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ரஷ்யாவில் நடக்கும் இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா அணிவகுப்பில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்றும், அவருக்கு பதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியின் நாஜி படையை வீழ்த்தியதை, ஆண்டுதோறும் மே 9ம் தேதி ரஷ்யா கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் மாஸ்கோவில் பிரமாண்ட அணிவகுப்பு மற்றும் ரஷ்யாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இந்தாண்டு நடக்கும், 80வது ஆண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படி, நம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குக்கு, ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக, முப்படை தலைமை அதிகாரிகளுடன், பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
மே 01, 2025 07:08

சிறப்பு. ஸ்டாலின் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்..


அப்பாவி
மே 01, 2025 07:03

மெடல்.கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை