உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பார்லிமென்ட் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடில்லி: பார்லிமென்ட் இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவில், சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜெயா பச்சனை, அழைக்கும் போது ஜெயா அமிதாப் பச்சன் என்றார்.இதனால் கோபமடைந்த ஜெயா பச்சன், ‛‛ நான் ஜெயா அமிதாப் பச்சன் என்று கூறியதன் தொனி எனக்கு பிடிக்கவில்லை. நான் கலைஞர். ஒவ்வொருவரின் உடல் அசைவையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். மன்னிப்புடன் ஒன்றை கூறி கொள்கிறேன். உங்களின் தொனி ஏற்புடையதாக இல்லை. நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்களின் தொனியை ஏற்க முடியாது என ஆவேசத்துடன் கூறினார்.பிறகு ஜக்தீப் தன்கர் கூறுகையில், ‛‛ ஜெயா உங்கள் இருக்கையில் இருங்கள். நீங்கள் பெரியளவில் நற்பெயரை சம்பாதித்துள்ளீர்கள். ஒரு நடிகர் என்பவர் இயக்குநருக்கு உட்பட்டவர். நான் இங்கிருந்து பார்ப்பதை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம். ஆனால், நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.இதற்கு ஜெயா பச்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். பிறகு சோனியா தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக திங்கட்கிழமை முடிவடைய இருந்த ராஜ்யசபா தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இதன் பிறகு லோக்சபாவும் தேதி குறிப்பிடமாமல் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை