மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago
தானே:மஹாராஷ்டிராவில் ராம பக்தர்களை தாக்கிய விவகாரத்தில், வகுப்புவாத மோதலுக்கு காரணமான சட்டவிரோதமாக இயங்கிய கடைகளை, புல்டோசர்களை வைத்து அரசு அகற்றியது.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தின் மீரா பஹீந்தர் மாநகராட்சிக்கு உட்பட்ட நயா நகர் பகுதியில் சமீபத்தில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டன.இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22ல் நடந்தது. இதையொட்டி இப்பகுதியில் ஹிந்து அமைப்பினர் சிலர், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன் அங்குள்ள சாலைகளில் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.அப்போது பட்டாசுகள் வெடித்ததால், அங்கு இருந்த சிலர் தடியுடன் சென்று பேரணியில் பங்கேற்றவர்களை தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், இருதரப்புக்கும் இடையேயான மோதலை தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக மோதலில் ஈடுபட்டதாக 60 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், 13 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இம்மோதலுக்கு சாலையோர கடைகள் தான் காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், இக்கடைகள் முறைகேடாக இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, மிரா பஹிந்தர் மாநகராட்சி நிர்வாகம், சட்டவிரோதமாக இயங்கிய கடைகளை, நேற்று முன் தினம் புல்டோசர்களை வைத்து அகற்றியது. இதையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நோக்கில், அப்பகுதியில் அதி விரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago