உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய ராம ஜென்மபூமி அறக்கட்டளை

5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரி செலுத்திய ராம ஜென்மபூமி அறக்கட்டளை

அயோத்தி: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தி உள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது; இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலமாக அயோத்தி ராமர் கோவில் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்தக் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மஹா கும்பமேளாவின் போது மட்டும் 1.26 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ypptu8q4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஆண்டில் மட்டும் 16 கோடி பேர் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்களில் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ரூ.400 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள்,சி.ஏ.ஜி., அதிகாரிகளால் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mediagoons
மார் 17, 2025 20:57

உலகமெல்லாம் இருந்து வரும் கருப்பு பணம் கள்ள பணம்


Barakat Ali
மார் 17, 2025 15:38

வரி ஏய்ப்போரை கண்காணிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ தயங்கும் மத்திய அரசு ......


M Ramachandran
மார் 17, 2025 14:28

அது போலே நடக்குமா? ஏமாற்றி பணத்தை வீட்டு குடும்ப கஜானாவிற்கு மடை மாற்றி உண்டு கொளுத்திருப்பார்கள்.


Ramesh Sargam
மார் 17, 2025 11:53

பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மற்ற மத வழிபாட்டு இடங்கள், இந்திய அரசுக்கு எவ்வளவு வரி கட்டியுள்ளது என்று ஒரு கணக்கு கூற முடியுமா?


C G MAGESH
மார் 17, 2025 12:44

அவர்கள் வரி கட்டுவதும் இல்லை, ஆனால் நாம் காட்டும் வரி பணம் அவர்களுக்கு போகிறது.


புதிய வீடியோ