உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் மாதிரி கல்லுாரி மாணவர் அசத்தல்  

ராமர் கோவில் மாதிரி கல்லுாரி மாணவர் அசத்தல்  

ஹாவேரி: அட்டையில் ராமர் கோவில் மாதிரியை வடிவமைத்து, சவனுார் கல்லுாரி மாணவர் அசத்தி உள்ளார்.ஹிந்துக்களின் பல ஆண்டு கனவான, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி ராமர் கோவிலை தங்களுக்கு தெரிந்த பாணியில், வடிவமைத்து, மக்கள் அசத்தி வருகின்றனர். அதுபோல ஹாவேரியின் சவனுாரை சேர்ந்த, கல்லுாரி மாணவர் பிரவீன் ஹோலப்பா, 22 என்பவர், அட்டை பெட்டியில் ராமர் கோவில் மாதிரியை வடிவமைத்து அசத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் தீவிர ராம பக்தன். அயோத்தி ராமர் கோவில் மாதிரியை வித்தியாசமாக வடிவமைக்க வேண்டும் என்று, எனக்கு தோன்றியது. இதனால் அட்டை பெட்டிகளை வாங்கி, அதை வெட்டி எடுத்து, அதன்மூலம் ராமர் கோவில் மாதிரியை வடிவமைத்தேன், இதற்கு 20 நாட்கள் ஆனது,'' என்றார்.மாதிரி ராமர் கோவில் முன்பு, பிரவீன் குடும்பத்தினர், நண்பர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ