உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் சவுக் என்ற இடத்தில் நள்ளிரவு கூடிய பொதுமக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் எழுப்பி, புத்தாண்டை வரவேற்றனர்.உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். அந்த வகையில் 2023ம் ஆண்டின் இறுதி நாளான நேற்று (டிச.,31) இரவு 11 மணியளவில் அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சவுக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி, புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். சரியாக 12 மணியை எட்டியவுடன் குழுமியிருந்த மக்கள் அனைவரும் 'ஹேப்பி நியூ இயர்' என்றும், 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் கோஷம் எழுப்பியும், செல்பி எடுத்தும், கேக் வெட்டி கொண்டாடியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். அயோத்தியில் இன்னும் 3 வாரத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் இந்த வருடத்தை ஸ்பெஷலாக கொண்டாடினர். நீரஜ் குப்தா என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி கூறுகையில், ''நாங்கள் புனிதமான ராமர் பிறந்த இடத்தில் புத்தாண்டைக் கொண்டாட வந்துள்ளோம். ஜனவரி 1ல் நாங்கள் சரயு நதிக்குச் சென்று புனித நீராடி, சிவன் கோயிலுக்குச் சென்று பின்னர் ராமஜென்மபூமியில் ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 06, 2024 19:37

மஹாத்மா காந்தியடிகள் அவர்கள் பிரார்த்தனை செய்யும் ' ரகுபதி ராகவ ராஜாராம் ' என்பதையும் இங்குபிரார்த்தனையில் குறிப்பிடலாமே


Dharma
ஜன 01, 2024 17:10

'ஜெய் ஸ்ரீராம்'...என்பது தவறு . ஜய் ஸ்ரீராம் என்பதே சரி. ஹிந்தியில் ஜெ என்ற சப்தம் இல்லை. ஜன கன...வில் கூட ஜயஹே என்று தான் வரும்.


Krishnakumar
ஜன 01, 2024 17:07

ஜெய் ஸ்ரீ ராம்...


Srprd
ஜன 01, 2024 14:52

Jai Shri Ram


மேலும் செய்திகள்





புதிய வீடியோ