உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்பத் ஜிகாத் பேச்சு ராம்தேவுக்கு கண்டனம்

சர்பத் ஜிகாத் பேச்சு ராம்தேவுக்கு கண்டனம்

புதுடில்லி, நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டதை தொடர்ந்து, 'சர்பத் ஜிகாத்' என பேசியதையும், அது தொடர்பான வீடியோவையும் திரும்பப் பெறுவதாக, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.யோகா குருவான பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல ஆயுர்வேத மருந்துகள், இயற்கை பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. கொரோனா காலத்தில், தன் நிறுவனத்தின் மருந்துகள் தான் சிறந்தது என்றும், அலோபதி மருந்துகளால் குணப்படுத்த முடியாது என்றும் ராம்தேவ் பேசினார். இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் சார்பில் சமீபத்தில், குலாப் சர்பத் அறிமுகம் செய்யப்பட்டது.இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், 'மற்றவர்கள் சர்பத் ஜிகாத்தில் ஈடுபடுகின்றனர். அவற்றின் விற்பனை வாயிலாக கிடைக்கும் பணம், மசூதிகள், மதரசாக்கள் கட்டவே பயன்படுத்தப்படுகிறது' என, ராம்தேவ் கூறியிருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'ரூஹ் அப்சா' என்ற சர்பத் விற்பனை செய்யும் 'ஹம்தர்த்' நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'எந்த ஒரு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை' என, ராம்தேவின் வழக்கறிஞர் வாதிட்டார்.ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. 'இந்த பேச்சு, எங்களுடைய மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் வகையில், வெறுப்பு பேச்சாக இது உள்ளது' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.இது தொடர்பாக ராம்தேவ், தன் நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. அடுத்த சில மணி நேரத்தில், தன் பேச்சு தொடர்பான வீடியோ, விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகளை நீக்க ராம்தேவ் தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஏப் 23, 2025 12:53

பிரபல சர்பத் தயாரிக்கும் மருந்து நிறுவனத்தில் முஸ்லிம்களை தவிர வேறு மதத்தவர்களுக்கு வேலை கொடுப்பதில்லையாம். ஆனால் மற்ற மதத்தினரும் சர்பத்தை வாங்க வேண்டுமாம். பாபாவின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.


Sampath Kumar
ஏப் 23, 2025 09:18

உங்க வெறுப்பு பேச்சு இப்போ 26 பேரை காவு வாங்கி உள்ளது என்பதை மறந்து பேசாதீர்கள்


சூரியா
ஏப் 23, 2025 10:37

செயலில் காணாத வெறுப்பை பேச்சில் காண்கிறீர்களா?


சூரியா
ஏப் 23, 2025 08:30

நீ ஹிந்துவா அல்லது முஸ்லீமாக என்று கேட்டு, நேற்று காஷ்மீரில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இப்படிப்பட்ட நிலைமை இருக்கையில், ஹிந்துக்கள் மட்டும் மதப்பாகுபீடு காட்டாமல் இருக்கவேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அனைத்து இதர மதத்தினர்களும் முஸ்லீம்களும் எந்தவித வர்த்தக உறவையும் வைக்கக்கூடாது. அவர்களை இனப்படு வணிக ரீதியில் முடக்கினால், எல்லாம் சரியாகிவிடும்.


Mathan
ஏப் 23, 2025 08:05

I support Pathanjali. Jai Hind


Barakat Ali
ஏப் 23, 2025 07:39

[மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் வகையில், வெறுப்பு பேச்சாக இது உள்ளது என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.] ஜிஹாத் என்பதன் உண்மைப் பொருள் தீய எண்ணங்களை ஒழிக்க ஈமானைப் பின்பற்றுவதாகும். அதாவது மனத்தூய்மை.. அதை மாற்றுமத அன்பர்களுக்கு எதிராக பிற்கால அடிப்படைவாதிகள் திருப்பினார்கள்.. கம்யூனிச கூமான்கள் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த இப்படி ஒரு கருத்து ....


Ramanujan
ஏப் 23, 2025 06:15

கோடி கோடியாக பணம் வைத்திருந்த நீதிபதி மேல் இ‌ன்னு‌ம் போலீஸ் கேஸ் பதிவு செய்யாதது கூடதான் எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது. என்ன செய்ய?


Kasimani Baskaran
ஏப் 23, 2025 03:47

ராம்தேவ் மீதுள்ள அடிப்படை வெறுப்பு பல முல்லாக்களை நிம்மதியில்லாமல் செய்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை