உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்: சர்பத் வழக்கில் கோர்ட் கண்டனம்

புதுடில்லி: சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரசாரம் மேற்கொண்ட விவகாரத்தில், 'ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி என்ற பெயரில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து யோகா குரு பாபா ராம்தேவ் விற்பனை செய்து வருகிறார். கொரோனா காலத்தில், அதற்கு மருந்து இருப்பதாகக் கூறி பதஞ்சலி மருந்துகளை இவர் விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டினர்.இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் ராம்தேவை கண்டித்தது. இந்த சூழலில், வட மாநிலங்களில் பிரபலமான ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராக வீடியோ விளம்பரம் ஒன்றை ராம்தேவ் நிறுவனம் வெளியிட்டது.அதில், 'ஒரு கம்பெனி சர்பத் விற்ற பணத்தில் மசூதி, மதரசா கட்டுகிறது. நீங்கள் அந்த சர்பத்தை குடித்தால் மசூதியும், மதரசாவும் கட்டப்படும். 'பதஞ்சலியின் ரோஸ் சர்பத்தைக் குடித்தால் குருகுலம், பதஞ்சலி பல்கலை கட்டப்படும். லவ் ஜிஹாத், ஓட்டு ஜிஹாத் போலவே, ஒரு சர்பத் ஜிஹாத்தும் நடக்கிறது' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ரூஹ் அப்சா சர்பத் தயாரிக்கும் ஹாம்தார்த் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாக ராம்தேவ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கூறுகையில், 'சர்ச்சைக்குரிய வகையில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என, ராம்தேவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதை மீறும் வகையில் அவர் மீண்டும் மீண்டும் செயல்பட்டு வருகிறார். 'சர்பத் விளம்பரத்தின் பின்னணியில் ராம்தேவ் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனி உலகில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றத்துக்கு வரவழைப்பதை தவிர வேறு வழியில்லை' என, குறிப்பிட்டார்.இதையடுத்து, ராம்தேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 02, 2025 16:20

இவரை உள்ளே வைத்து நொங்கெடுத்தால் தான் ஒழுங்காக இருப்பார் போல் உள்ளது!


சிந்தனை உங்களுக்கு வரிகட்டும் மூடன்
மே 02, 2025 14:36

சட்ட விரோதமாக தேச விரோதமாக இங்கே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் ஹிந்துக்கள் தான் செய்யக் கூடாது என்று நன்றாக விளக்கிய அநீதிபதிகளுக்கு மிக்க நன்றிகள்


RAMAKRISHNAN NATESAN
மே 02, 2025 11:49

உண்மையைச்சொன்னா உடம்பு எரிச்சல் ..........


J.Isaac
மே 02, 2025 11:31

அரசின் பக்கபலம்


oviya vijay
மே 02, 2025 07:40

ராம் தேவ் மட்டுமே இந்தியாவில் தனி உலகத்தில் இருக்கிறார்...மற்றவர்கள்...?


Kasimani Baskaran
மே 02, 2025 03:44

நீதிமன்றத்தை முழு நேர விளம்பரத்துக்கு பயன்படுத்தும் ராம்தேவின் முயற்சி கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்துக்கு வேறு வேலையே இல்லை போல.


Rajan A
மே 02, 2025 03:41

What happened to national herald case? Sc must fix a deadline for such cases against corruption first


மீனவ நண்பன்
மே 02, 2025 02:27

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல ...


Nandakumar Naidu.
மே 02, 2025 01:46

நீதி மன்றங்கள் ஹிந்து விரோத நீதிபதிகளால் நிரம்பி வழிகின்றன. இது வெட்கக்கேடான விஷயம்.


தாமரை மலர்கிறது
மே 02, 2025 01:15

ராம்தேவ் ஒரு சாமியார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டிய கடமை கோர்ட்டுக்கு உள்ளது. கண்டபடி பேசுவது தவறு.


J.Isaac
மே 02, 2025 11:32

சாமியார், எனக்கு மிஞ்சின சாமி யாரும் இல்லை என்றால் ?