போலி பட்டம் பெற்ற ராம்தேவ் உதவியாளர்
புதுடில்லி: யோகா மாஸ்டர் ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா போலி பட்டம் பெற்றதாக சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலகிருஷ்ணா, பாஸ்போர்ட் வாங்க பல்கலைகழக பட்டத்தை பயன்படுத்தியபோது விசாரணையில் அது போலி என கண்டறியப்பட்டது. கிருஷ்ண சமஸ்கிருத மகாவித்யாலயாவில் சமஸ்கிருதம் பட்டம் 1996ல் வாங்கியதாக காட்டியுள்ளார் பாலகிருஷ்ணா. விசாரணை நடத்தியபோது அது குறித்து விபரம் அங்கு இருக்கவில்லை இதனால் அவரது பட்டம் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டதாக அப்பல்கலைகழக துணை வேந்தர் சுக்லா தெரிவித்தார்.