உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்கார வழக்கு: ஐகோர்ட் நீதிபதி கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

பலாத்கார வழக்கு: ஐகோர்ட் நீதிபதி கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

புதுடில்லி : பாலியல் பலாத்கார வழக்கில், புகார் கூறிய பெண்ணை விமர்சித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, பாலியல் பலாத்காரம் தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் தனி வழக்காக விசாரிக்கிறது.

சர்ச்சை

'போக்சோ சட்ட வழக்கில், சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை அறுப்பது என்பதை, பலாத்காரமாகவோ, பலாத்கார முயற்சியாகவோ கருத முடியாது' என, உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியிருந்தது.இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கினார். அப்போது, 'குடிபோதையில் இருந்த பெண், ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் வாயிலாக பிரச்னையை அவரே வரவேற்றுள்ளார்' என, நீதிபதி கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், போக்சோ வழக்குடன் இணைத்து, இதையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று கூறியதாவது: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க விரும்பியிருந்தால், அதற்கான காரணத்தை தெரிவித்து வழங்கியிருக்கலாம்.ஆனால், தேவையில்லாமல், புகார் கூறிய பெண்ணை விமர்சித்து கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற கருத்துக்கள், உத்தரவுகள், பொதுமக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆபத்தானவர்கள்

சிறுமியர் கடத்தல் தொடர்பான மற்றொரு வழக்கில், அலகாபாத் உட்பட பல உயர் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கியுள்ளன. இதனால், குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் நாட்டுக்கு ஆபத்தானவர்கள். அதனால், பாலியல் பலாத்காரம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vijai hindu
ஏப் 16, 2025 21:30

இது மாதிரி தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் கண்டனம் மட்டும் போதுமா? பெண்ணின் போன மானம் திரும்பி வருமா...?


M S RAGHUNATHAN
ஏப் 16, 2025 12:36

இப்போது இருக்கும் நீதிபதிகளுக்கு எப்படி தீர்ப்பு எழுத வேண்டும் என்பதே தெரியவில்லை. ஆங்கில அறிவு குறைவாக இருக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 16, 2025 11:47

பெண்களை இந்த உலகம் இன்னும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் பெண்களும் இந்த கருத்துக்கு உட்படுவது தான். சினிமாவில் புகழ் பணம் மாய மயக்கத்திற்காக சினிமாவில் பெண்கள் வலிய சென்று தங்களை கவர்ச்சியாக காட்டி கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட சியர் கேர்ள்ஸ் என்ற பெயரில் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பெண்களும் பணம் புகழுக்கு மயங்கி செல்கிறார்கள். பெண்கள் தங்கள் கண்ணியம் காக்க தங்களுக்கு என்று விதிமுறைகள் வகுத்து தாங்கள் சில இடங்களில் அடக்கத்துடனும் கட்டுபாட்டு உடன் நடந்து கொள்ளாவிட்டால் இது போன்ற விமர்சனங்கள் பாலியல் சீண்டல்கள் தவிர்க்க முடியாதது ஆகி விடும். இதில் வேதனை தரும் விஷயம் குழந்தைகள் கூட பாதிக்கப்படுவது. இதற்கு முக்கிய முதன்மை காரணம் சிறிய பெண் குழந்தைகளை பெரிய பெண் குழந்தைகள் போல் தற்போதைய மார்டன் பெற்றோர் நடத்துவது வயதில் சிறிய பெண் குழந்தைகளை அவர்களது வயதுக்கு மீறிய காதல் பாடல்கள் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்துவது சிறிய பெண் குழந்தைகளுடன் பெரிய ஆண்களை வைத்து நடனம் ஆட வைப்பது சிறிய ஆண் குழந்தைகளுக்கும் சிறிய பெண் குழந்தைகளுக்கும் பெரியவர்கள் போல் மேக்கப் போட்டு காதல் பாடல்களுக்கு நடனம் ஆட வைத்து ரசிப்பது போன்றவை தான். இதில் மிகவும் கடுமையான வேதனையானது என்னவென்றால் இதற்கு அந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகள் தாய் தந்தையரே ஒத்து போவது. கலி காலம்.


கனோஜ் ஆங்ரே
ஏப் 16, 2025 11:41

அலகாபாத்...னுன்னாவே, அறிவாளிகள்...னு சொல்லுவாங்களே...


M R Radha
ஏப் 16, 2025 09:43

ஒரே தீர்வு கொலிஜிய முறை முற்றிலும் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட்டு கடும் கட்டாய தேர்வு முறை வரணும்.


Padmasridharan
ஏப் 16, 2025 08:55

"குடிபோதையில் இருந்த பெண்.. Make in india நாட்டுக்கு, மது குடித்து ஆண்கள் செய்யும் குற்றங்கள் போதாதென்று இப்ப "மது"வுடன் "மாது"க்கள் தேவையா.. Your honour


Velan Iyengaar
ஏப் 16, 2025 08:55

இதெல்லாம் உத்தம ராமராஜ்யத்தில் நடைபெறுவது தான் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை ராமர் எப்போது கல்கி அவதாரம் எடுப்பார் ??


Varadarajan Nagarajan
ஏப் 16, 2025 08:33

உச்சநீதிமன்றத்தின் இதே கருத்தைத்தான் பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். வழக்குகளில் நீதிபரிபாலனம் என்பது நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்மட்டுமே இருக்கவேண்டும் & இருக்கமுடியும். பல வழக்குகளில் தீர்ப்போடு சேர்த்து நீதிபதிகள் கருத்துக்களையும் கூறுகின்றார்கள். இவை வழக்கின் தீர்ப்பாக கருத்தமுடியுமா? சட்டப்படி கட்டுப்படுத்துமா? இதுபோல சில நேரங்களில் சர்ச்சைகளில் முடிகின்றன.


VENKATASUBRAMANIAN
ஏப் 16, 2025 08:13

இது போன்ற நீதிபதிகளினால் நேர்மையான நீதிபதிகளுக்கு பிரச்சினை. இது போன்றவர்களை உடனே பதவியிலிருந்த தூக்கி எறியவேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் யோசிப்பார்கள்


M R Radha
ஏப் 16, 2025 09:44

கொலிஜிய வாரிசு முறை ஒழிப்பே தீர்வு


Dharmavaan
ஏப் 16, 2025 08:06

கொலீஜியத்தின் கேடு இவை அது நீக்கப்பட்டால்தான் நீதித்துறை சீர்படும்


Velan Iyengaar
ஏப் 16, 2025 08:57

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிந்துரையில் மாநில அரசின் பங்கு மிக மிக அதிகம் ராமராஜ்யம் நடத்தும் யோகியின் கடந்த பலவருட ஆட்சியின் அவலம் என்பதா அவலட்சணம் என்பதா ?? இல்லை கொடுமை என்பதா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை