உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லிப்ட் கேட்டு வந்த கல்லூரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு

லிப்ட் கேட்டு வந்த கல்லூரி மாணவி பலாத்காரம்: தலைமறைவான நபருக்கு போலீஸ் வலைவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: டூவீலரில் லிப்ட் கேட்டு வந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: கல்லூரி படிக்கும் 21 வயதான மாணவி ஒருவர், கோரமங்கலா பகுதியில் நண்பர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் டூவீலரில் லிப்ட் கேட்டு பயணித்தார். அந்த நபர், மாணவி சொல்லும் பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் மொபைலில் இருந்து ஆபத்து கால செய்தி மற்றும் தகவலை தொடர்ந்து பெண்ணின் நண்பர்கள் தேடிச்சென்றனர். ஓசூர் சர்வீஸ் சாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அந்த இடத்தில் பேன்ட் மட்டும் அணிந்து முகத்தில் காயத்துடன் ஒருவர் நிற்பதை நண்பர்கள் பார்த்துள்ளனர். அவரை பிடிக்க முயற்சித்ததை தொடர்ந்து அந்த நபர் தப்பியோடினார்.பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

s.sivarajan
ஆக 18, 2024 23:48

அந்த பெண்ணுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் எப்படி அத்தனை நம்பிக்ககை ? இது முற்றிலும் அலட்சிய போக்கால் வந்த வினை.


தமிழன்
ஆக 18, 2024 23:28

அருண் ஐபிஎஸ் பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்க


Kasimani Baskaran
ஆக 18, 2024 21:48

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் பாதுகாப்பு கண்டிப்பாக கிடையாது. என்ன தைரியத்தில் கண்டவனிடமும் லிப்ட் கேட்டிருப்பார் இந்தப்பெண்?


Ramesh Sargam
ஆக 18, 2024 21:42

இதுபோன்ற குற்றங்களை நமது நீதிமன்றங்கள் கவனிக்கின்றன. ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும். சட்டத்தில் பல ஓட்டைகள். அவற்றை உபயோகப்படுத்தி நமது மெத்தப்படித்த வக்கீல்கள் குற்றம் செய்தவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடுகின்றனர். நமது நாட்டின் சட்டங்கள் மாற்றி எழுதப்படவேண்டும். குற்றம்செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கப்படவேண்டும்.


sankar iyer
ஆக 18, 2024 21:32

கல்லூரி பெண் ஏன் தனியாக போக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடதுக்கு ஏன் செல்ல வேண்டும் . பெண்கள் ஒற்றுமையாக நியதிகளை வகுத்து வாழ வேண்டிய தருணம் இது


அப்பாவி
ஆக 18, 2024 21:01

நம்ம உளுத்துப்.போன சட்டங்கள் மூலம் நிரபராதியா வெளியே உட்டுருவாங்க.


RAMAKRISHNAN NATESAN
ஆக 18, 2024 20:36

India will become another Botswana.


sankaran
ஆக 18, 2024 20:10

பெண்களுக்கு வம்பை விலைக்கு வாங்குவதே வேலையா போச்சு... அனாவஸ்யமாக ஒருவனை தவறு செய்வதற்கு சந்தர்ப்பம் குடுத்து விட்டாள் ...


ديفيد رافائيل
ஆக 18, 2024 20:08

Lift கேட்டு போறதுக்கு பதிலா rapido bike taxi book பண்ணி போயிருந்தா பாதுகாப்பா இருந்திருக்கும். Rapido captain details எல்லாமே இருக்கும், தப்பு பண்றத பற்றி rapido captain நினைக்க முடியாது.


chennai sivakumar
ஆக 18, 2024 19:49

தண்டனைகள் கடுமையாக இல்லை. கால தாமதமாக தீர்ப்பு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை