உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.30 லட்சம் கோடி டாடா குழுமம் இனி யாருக்கு!

ரூ.30 லட்சம் கோடி டாடா குழுமம் இனி யாருக்கு!

மும்பை: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைந்த நிலையில், அவரது ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற பெரிய கேள்வி எழுந்த நிலையில், அறக்கட்டளை புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் கடந்த 9ம் தேதி இரவு காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று ஏராளமானோர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். டாடா நிறுவனத்தை இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து மறைந்த அவர், பொதுசேவைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தற்போது, அவரது மறைவிற்குப் பிறகு, ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை அடுத்து நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதுமையின் காரணமாக 2012ம் ஆண்டு டாடா குழும தலைவர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். அவருக்கு அடுத்ததாக 2017ம் ஆண்டு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நடராஜன் சந்திரசேகரன் தான், தற்போது தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சவால்களை கடந்து டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். இருப்பினும், ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடா தான், டாடா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர், டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், அடுத்த தலைமுறையினரான நோயல் டாடாவின் வாரிசுகளில் மூத்தவரான லியா டாடா 2006ம் ஆண்டு டாடா குழுமத்தின் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். இவரும், டாடா குழுமத்தின் தலைமை பதவிக்கான போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நோயல் டாடாவின் மற்ற வாரிசுகளான மாயா டாடா மற்றும் நெவிலே டாடா ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு முக்கிய பதவியை கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

நோயல் டாடா நியமனம்

டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக, அவரது ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து மும்பையில் நடந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

arulmani arulmani
அக் 11, 2024 18:12

டாடா டிரஸ்ட் ரதன் யுடையது . சொத்து 3500 கோடி மட்டும். டாடா சன்ஸ் வேறு .


Murugan6972 Murugan6972
அக் 11, 2024 13:51

குட் ?


Rasheel
அக் 11, 2024 13:39

ஈரானில் இருந்து வந்த பார்சிகள், அங்கு உள்ள அமைதி மார்க்க கொடுமையினால் 800 ஆண்டுகளுக்கு முன்னால் நவசரய் என்ற இடத்தில, குஜராத் மாநிலத்தில் குடியேறினர். அமைதியான வழியில் தொழில் நடத்தி இந்தியாவை முன்னேற செய்த புகழ் இவர்களை சேரும். 200 ஆண்டுகளுக்கு முன்னால் குடியேறிய பார்சிகள் ஆங்கிலேயர் காலத்தில் மும்பையில் தொழிலை ஆரம்பித்தனர். மேற்கு வங்காளத்தில் நானோ கார் தொழிற்சாலை ஆரம்பிக்க மம்தா பிரச்சனை செய்த பொது குஜராத் மாநில முதல்வர் மோடி அவர்கள் சிகப்பு கம்பளம் விரிக்க, குஜராத்தில் டாடா மோட்டார்ஸ் தொழிற்ச்சாலையை நிறுவி அங்கு வெற்றிகரமாக ஓடி கொண்டு உள்ளது.


Natesan B
அக் 11, 2024 13:20

they are not hindu they are parsi


Natesan. C
அக் 11, 2024 18:41

So what? whats your problem? dont forget India is a secular country


Lion Drsekar
அக் 11, 2024 12:48

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, எது எப்படியோ, இவர்கள் நடத்தும் ஹோட்டலில் ஒருமுறை எல்லோரும் தங்கவேண்டும் அப்போதுதான் உண்மை நிலவரம் புரியும் சென்னை மஹாபலிபுரம் அருகில் உள்ளது இவர்களது ஹோட்டல், உள்ளே சென்றோம் , வெளிநாட்டில் உள்ளது போன்று இருந்தது, அவர்கள் நம்மை அழைக்கும் நேரம் வரை காத்திருக்கவேண்டும், அழைத்து நமது அரசாங்கத்தால் கொடுக்கபப்ட்டிருக்கும் எல்லா ஐ டி கார்டுகளை வாங்கி சரிபார்த்த பின்பு உள்ளே அழைத்து செல்கிறார்கள், ஒரு நாளைக்கு அன்று offer ஆகவே ஒருவருக்கு ரூபாய் 10000 மாக இருந்தது . சைவம் , அசைவம் என்ற இரண்டு பிரிவு உணவு இலவசம் என்று போட்டிருந்தார்கள், நாங்கள் ஒரு கணக்கு போட்டோம் இங்கு ஒரு வஞ்சிரம் ரூபாய் 130 க்கு மேல் ஆகவே நாம் ஆளுக்கு நான்கு ஐந்து என்று மற்ற ஊர்வன பரப்பன எல்லாம் ஒரு கணக்கு போட்டு உணவு அருந்த உற்கார்ந்த பொது , அவர்கள் என்ன சாப்பாடு என்று கேட்க அசைவம் என்று கூறியவுடன் , நம்ப மாட்டர்கள் சத்தியம் , உணவு தாமே ஒரு கரண்டி, குழந்தைகளுக்கூட பத்தாத உணவு, மீன் மற்ற அசைவ உணவுகள் எங்கே இனிதான் வருமா என்று கேட்டோம் அவர்கள் சிறிய கப்பில் ஊறுகாய் போல் ஏதோ சிறிய துந்து ஒன்று இருந்தது அதைக்காண்பித்தார்கள், பிறகு நாம் விரும்புவது கிடைக்குமா , நாமே எடுத்து சாப்பிடுவது எங்கே என்று கேட்க அதற்க்கு கனியாக நீங்கள் பணம் காட்டினாள் அதோ தெரிகிறது அங்கு செல்லவேண்டும் என்று கூறினார்கள், அதற்குள் என்னைப்போலவே ஒருவர் பசி ஹாங்கவில்லை குடும்பத்துடன் வந்திருந்தா,ர் அவர் நம் தாய்மொழி தமிழில் உரத்த குரலில் சாப்பாட்டின் தரம் , அளவு இவ்வ்ளவு மட்டமாக இருக்குரியதே என்று குரல் எழுப்ப மேல் அதிகாரிகள் வந்து அவரை சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தார்கள் அதே நான் மிகவும் அன்பாக தாழ்ந்த குரலில் அங்கு வந்த ஒரு மேல் அதிகாரியை என்னிடம் வரவைத்து அவரிடம் நான் ஒரு கைபேசி என்னை மற்றும் நான் யாருடைய மிக நெருங்கிய நண்பன் கல்லூரி நண்பன் என்று கூற , என் நண்பரிடம் போனில் அழைத்து ஸ்பீக்கர் போனில் பேசினேன் அவரும் ஏய் எப்படி இருக்கிறாரோ என்று நாங்கள் பெசோனோம், நான் சும்மாதான் போன் போட்டேன் பிரவு பேசுகிறேன் என்று வைத்துவிட்டேன் , அதைப்பார்த்த அந்த அதிகாரி அந்த ஹோட்டலின் உயர் அச்சிகாரையை அழைத்துவந்து எனக்கு றிமுகப்படுத்தி, எல்லாமோ ஒரு நொடியில் ஐயா உங்களுக்கு இல்லாததா என்று கூறி அவர்கள் கொடுத்த மரியாதையும், இலவச சாப்பிடும் இன்றுவரை மறக்க முடியாது . நான் பேசியதோ அழைத்தது வேறு யாரும் அல்ல டாடா குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் . இந்த பதிவு எதர்காக்க என்றால் எல்லோருக்கும் தேவையான உணவை சாதாரண ஹோட்டலில் அளவில்லா சாப்பிடு கொடுக்கும் இவர்கள் சப்போனில் பரிமாறி வருவது வருத்தம் அளிக்கறியாது . இருக்க இடம் சிறிதாக இருந்தாலும் கொடுக்கும் உணவு தரமாக இருத்தலும் மிக அவசியம், அங்கு கொடுக்கப்பட்ட உணவும் தரமாக இல்லை, என் நண்பரிடம் நானும் புகார் கொடுக்கவில்லை, மாறாக அங்கு பணிபுரிபவர்களிடன் வேண்டிக்கொண்டு தங்களையும் , தயாரிப்புகளை மக்களுக்கு அவரவர்களுக்கு ர்ப்ப கொடுக்கும்படி வேண்டிக்கொண்டு வந்தேன் , இந்த செய்தியைப் படிக்கும்போது , அதில் ஹோட்டல் என்று ஒரு வார்தையைப் படித்தேன் உடனடியாக நினைவுக்கு வந்தது . வந்தே மாதரம்


Sivagiri
அக் 11, 2024 12:27

ஆனா , நோயலும் வாரிசுகளும் , க்றிஸ்டின்களோ ? . . பெயர் எல்லாம் அப்டி இருக்கே ?. . . அப்டின்னா , இனி ட்ராக் வேற மாதிரி போகுமே . . .


kulandai kannan
அக் 11, 2024 12:26

லட்சம் கோடிகள் என்றாலே நம்மூரில் சில ராசா க்கள் 'ஆ'வென்று வாய் பிளப்பார்கள்.


தஞ்சை மன்னர்
அக் 11, 2024 11:49

அதில் கொஞ்சம் பணத்தை பெற்று கொள்ள வகை செய்யலாம் ஏன் என்றால் பி சே பி இன்னும் எவ்வளவு புளுகு பொய் சொல்லவேண்டி வரும் என்று தெரியவில்லை அவர்கள் படி அளக்க மாட்டார்கள் செலவுக்கு என்ன செய்வது இப்படி கொஞ்சமா எடுத்துக்க வேண்டியதுதான் கரணம் கீழே ஒரு வாசகரின் கருத்து கொந்தளிப்புதான்


Barakat Ali
அக் 11, 2024 11:43

வாரிசு யார் என்று அவர் குறிப்பிடவில்லையாமே ????


Narayanan Sa
அக் 11, 2024 09:49

ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய கொஞ்சம் டைம் கொடுக்கலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை