உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அஸ்வின். இவருக்கு வயது 38. இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்டில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்று, சாதனை பெற்றுள்ளார். இவர், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பு அளித்து வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1v7zwnh1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் உட்பட 3,503 ரன்கள் எடுத்துள்ளார். அனில் கும்ளேவுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின். 2010ம் ஆண்டு முதல், இந்தியா அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், இன்று (டிச.,18) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் பி.சி.சி.ஐ.,க்கு நன்றி தெரிவித்து உள்ளார். வரும் 2025ம் ஆண்டில் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை அணியில் அஸ்வின் களம் இறங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

rama adhavan
டிச 18, 2024 18:26

உண்மை.


Tensingh
டிச 18, 2024 17:31

இவ்வளவு சீக்கிரம் ஓய்வு அறிவித்ததற்கு தற்போதைய பயிற்சியாளர் காவதம் காம்பிர் காரணமாக இருக்கலாம்.


orange தமிழன்
டிச 18, 2024 16:40

great player....used his "carrom" ball effectively..All the very best Ashwin ..


Santhosh Muscat
டிச 18, 2024 15:04

Best player wishes you IPL trophy, he helped Indian team in important situations. and one day matches


Palinci
டிச 18, 2024 14:10

மிகவும் நுட்பமான பந்து வீச்சரர்.. ஆசியா மைதானத்தில் அஸ்வின் நின் பங்கு இந்தியா அணியின் பலமுறை கைகொடுத்துள்ளது. next generation player need to learn from him.


Jay
டிச 18, 2024 13:25

Happy retirement to Ashwin He could continue few more years at IPL. He is the best bowler ever to come from TN and best cricketer from TN. He wont be celebrated in TN like a Gukesh, since he is from bramin community. We recognise your contributions Ashwin


sridhar
டிச 18, 2024 13:23

Rohit , Kohli , Jadeja and Ashwin are all on the wrong side of thirties. Ashwin has shown the way. Will the others take the cue. Youngsters are waiting for chances.


Srprd
டிச 18, 2024 12:40

Great team player and fantastic cricketer. A wonderful sportsman. Great job .


krishnamurthy
டிச 18, 2024 12:33

சரியான நேரத்தில் சரியான முடிவு . நல்ல பெயருடன் இருக்கும்போது ஓய்வு அறிவித்தது நன்று


ஆரூர் ரங்
டிச 18, 2024 11:45

எல்லா கிறுக்கெட் வீரர்களும் ஒய்வு பெறுவது நாட்டுக்கு நல்லது. நாட்டில் நேரத்தை வீணடிக்கும மிகப்பெரிய தெண்டம் விளையாட்டு.


ES
டிச 18, 2024 12:57

Here comes guys to tell others what to do


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை