உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை (ரெப்போ விகிதம்) 6%ல் இருந்து 5.5% ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன் படி, கடந்த பிப்.5ம் தேதி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருந்தது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 06) ரெப்போ வட்டி விகிதத்தை 6%ல் இருந்து 5.5% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.''ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும். வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது'' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.கடந்த பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய 3 மாதங்களை சேர்த்து, கடந்த 6 மாதங்களில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A.Gomathinayagam
ஜூன் 06, 2025 14:08

வங்கி கடன் வாங்குபவர்களுக்கு ஒரு விழுக்காடு வட்டி குறைவதால் ஏராளமானோர் ,வணிக வீட்டு கடன் வாங்குவார்கள் .அதே சமயம் வங்கி சேமிப்பாளர்கள் தங்கள் வட்டி வருமானத்தில் ஒரு விழுக்காடு இழப்பார்கள் .சேமிப்பைவிட கடன் வாங்குவதே சிறப்பு


Nada Rajan
ஜூன் 06, 2025 13:19

வீடு, வாகன வட்டி விகிதம் குறைய வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை