உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்

கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்

பெங்களூரு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள், 27. இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருவதுடன் இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் பெங்களூரு அணியிலும் இடம் பெற்றுள்ளார். காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் அவர் மீது செக்ஸ் மற்றும் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் ' கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார். போலீசாரும் இவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

சென்னை அணி தோல்வி

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நடைபெற்ற இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் இவரின் சிறப்பான பந்துவீச்சால் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூலை 08, 2025 11:46

பாலியல் புகாரில் பெண்ணின் ஒழுக்கம் உறுதி செய்ய வேண்டும். புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் நன்னடத்தை அறியாமல் போலீஸ் வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை கூடாது. ஒழுங்காக வாழும் பெண்ணிற்கும், இஷ்டம் போல் வாழும் பெண்ணிற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும். பெண் தன் குற்றத்தை நியாயப்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் இருவரும் தண்டனைக்கு உரியவர்கள்.


தத்வமசி
ஜூலை 08, 2025 11:27

கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். - இந்த வரிகளில் ஏதோ இடிக்கிறது. அவரோடு சேர்ந்து இவரும் சேர்ந்து நன்றாக சுற்றினார், பிறகு ஒத்து வரவில்லை இருவரும் பிரிவதில் இந்த பெண்ணுக்கு விருப்பமில்லை. அதனால் புகார் செய்கிறார்.


Ganesun Iyer
ஜூலை 08, 2025 11:14

இல்லாத கல்யாண ஆசை ..