உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு

புதுடில்லி: 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய தயார். மோதலை தணிப்பதற்கு தேவையான வழியை இந்தியா கண்டறிய வேண்டும்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்கி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7xj3zrqp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி, எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை தணிப்பதற்கு தேவையான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் தொலைபேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தவிர்க்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்; அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இன்று காலை தொலைபேசியில் பேசினேன். இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் சரியானதாகவும், பொறுப்புடையதாகவும் தான் இருக்கும். தற்போதும் அப்படித்தான் இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தம்இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

India our pride
மே 10, 2025 18:47

இவனை நம்ப கூடாது. பின்னால் இருந்து குத்துவான். அடுத்த 50 ஆண்டுகள் பாகிஸ்தானை எழுந்து இருக்காமல் செய்வது தான் அரசாங்கத்தின் புத்திசாலித்தனமாக செயலாக இருக்கும். உங்களை வேரோடு ஒழிப்பேன் என்று சொல்லும் ஒரு மத வெறி கொண்ட நாட்டொடு எப்படி சமாதானம் பேச முடியும்.


sankaranarayanan
மே 10, 2025 17:52

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை தணிப்பதற்கு தேவையான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் தொலைபேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தவிர்க்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதிலிருந்தே தெரிகிறதா அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அதே சமயம் முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் தொலைபேசினார் ஒருநாட்டின் அமைச்சருடனும் மற்றொரு நாட்டில் ராணுவ தளபதியுடனும் பேசியுள்ளார் இதிலிருந்தே தெரிகிறது பாகிஸ்தானில் ராணுவம்தான் ஆட்சிபுரிகிறது ஜனநாயக நாடு அல்ல அல்ல அல்ல .


Sudha
மே 10, 2025 17:11

என்ன மாதிரி வலி உறுத்தினார்னு எழுதுங்க, அமெரிக்கா வுக்கு என்னென்ன பதில் கண்டிஷன்ஸ் போடலாம் னு எழுதுங்க வாசகர்களே


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 16:42

குறிப்பாக அமெரிக்க துணை அதிபர் தலையிட மாட்டோம், எங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று சொன்னபிறகும் இவர் வாய்திறந்துள்ளார் .... இவருக்கு தேசபக்தியுள்ள இந்தியர்கள் பலர் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்கள் ...... அவற்றையும் பார்த்தேன் ..... .


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 16:38

கருத்துக்கள் வாயிலாக தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள நல்ல வாய்ப்பு ...


RAMAKRISHNAN NATESAN
மே 10, 2025 16:09

அமெரிக்க துணை ஜனாதிபதி என்ன சொல்கிறார் ? போரில் தலையிட மாட்டோம் .... எங்களுக்கு வேண்டாத விஷயம் என்கிறார் ... இவர் நாங்கள் நிறுத்த உதவுகிறோம் என்கிறார் .... அமெரிக்காவின் நிலைப்பாடு குழப்பத்தில் உள்ளது .....


எம். ஆர்
மே 10, 2025 15:47

ஐயோ நான் மறைமுகமா என் தேவைக்கு வளர்த்த தீவிரவாதிகளும் ஆயுதங்களும் இப்படி ரத்த ஆறாகவும் சுக்குணீராகவும் போகுதே இதை வெளியே என்னால சொல்லவும் முடியாது இந்தியாகாரன் அடிச்சு துவம்சம் செய்யுறத பாக்கும்போது சும்மாவும் இருக்க முடியல வயிறு எறியிது நான் என்னதான் செய்வேன் ஐயோ - இப்படிக்கு அமெரிக்கா


Varadarajan Nagarajan
மே 10, 2025 15:31

இந்தியா எந்த நாட்டின்மீதும் போர்தொடுக்கவில்லை. உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்கும் போரையும் இந்தியா ஆதரித்ததில்லை. போதுமான ஆதாரங்களை பலமுறை அளித்தும் தீவிரவாதிகளின்மீது பாக்கிஸ்தான் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவு அளித்துவந்துள்ளது. எனவே இந்தியா தற்பொழுது தீவிரவாதிகளின்மீது தாக்குதல் நடத்துகின்றது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்குவதால் அதற்க்கு தகுந்த பதிலடியைமட்டுமே இந்திய ராணுவம் கொடுத்துவருகின்றது. உண்மையான போரை இந்தியா தொடங்கினால் 24 மணிநேரத்திற்குள் அதை முடித்துவிடமுடியும். அதற்க்கு அவசியமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது பாகிஸ்தான்தான். எனவே அமெரிக்கா தேவையான அறிவுரைகளை பாகிஸ்தானுக்கு சொல்லவேண்டும். பாகிஸ்தானுக்கு F16 போர்விமானத்தையும் கொடுப்பார்கள் இந்தியாவிற்கு அறிவுரையையும் சொல்லுவார்கள்.


Madras Madra
மே 10, 2025 15:05

இவ்வளவு நடந்த பிறகு எப்படி போரை நிறுத்துவது ? பக்கிகளுக்கு பிரியாணி தின்ன கொழுப்பு மொத்தமும் வற்றும் வரை போர் தான் அடிதான் பகையையும் நெருப்பையும் மொத்தமாக காலி செய்தால் தான் அப்படி முன் காலங்களில் செய்யாமல் நாம் இழந்தது போதும் உலக நாடுகள் எவன் பேச்சையும் நாம் கேட்க கூடாது


ஈசன்
மே 10, 2025 15:00

அமெரிக்க அமைச்சரே, போரை நிறுத்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஜெய்சி முகமது தலைவன் மசூத் அசாரையும் லஷ்கர் தலைவன் ஹபீஸ் சையதையும் உடனே இந்தியாவிடம் ஒப்படைக் சொல்லு. அடுத்த நிமிடம் போர் நின்றுவிடும்.


மூர்க்கன்
மே 10, 2025 17:11

அதை செய்தால் போர் நின்று விடுமா?? இதை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்குறது? வாய் இருக்குதுன்னு கண்டதெல்லாம் பேச கூடாது? இந்தியாவில் ராஜ்ய ஆளுமைகள் இருக்கும்போது பொறுப்பில்லாமல் கண்ட எருமைகள் எல்லாம் கருத்து சொல்ல கூடாது.


முக்கிய வீடியோ