உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடினமான நேரத்தில் நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு படையினர் தெரிவித்தனர்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் சேதம் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடனும், அரசாங்கத்துடனும் நாங்கள் துணை நிற்கிறோம். நட்பு அடிப்படையில் அண்டை நாடான நேபாளத்திற்கு தேவைப்படும் எந்த ஒரு உதவியும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பிரேம்ஜி
அக் 05, 2025 19:58

முதலில் உங்கள் வீட்டைச் பாருங்க ஜி! எங்க வரிப்பணம் உங்கள் இஷ்டப்படி செலவு செய்ய அல்ல!


vivek
அக் 05, 2025 21:46

பிரேம்ஜி உங்க வளர்ச்சி டாஸ்மாக் வளர்ச்சி...அதை மாத்துங்க ...


ஆரூர் ரங்
அக் 05, 2025 22:03

இந்திய ராணுவத்தில் ஆயிரக்கணக்கான நேபாளி கூர்க்காக்கள் பணிபுரிகின்றனர். நமது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். தெரியுமா?.


Indian
அக் 05, 2025 18:49

இது போல் தமிழ் நாட்டுக்கும் செய்யுங்க


vivek
அக் 05, 2025 19:15

இங்கு உம்மை போல திருடர்கள் அதிகம் கைலாசம்....


N Sasikumar Yadhav
அக் 05, 2025 20:18

திருட்டு திராவிட கண்ணை எடுத்துவிட்டு பாரு .பாரதத்தில் மற்ற மாநிலத்தைவிட அதிகமாக செய்திருக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு . ஆனால் அந்த திட்டங்கள்மீது திருட்டு திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கிறது


Indian
அக் 05, 2025 20:50

விவேக் . உன் சொந்த ஊரு பீகார் ஆ ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை