உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் : மம்தா அறிவிப்பு

மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் : மம்தா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியிலிருந்து விலக தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.கோல்கட்டாவில் இளம் பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஜூனியர் டாக்டர்கள் குழு வராததால், முதல்வர் மம்தா பானர்ஜி பல மணி நேரம் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், கடந்த ஆக.,9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் மம்தா முதல்வர் பதவிலியிருந்து விலக வேண்டும் என 34 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் ஜூனியர் டாக்டர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு அவர்களுடன் முதல்வர் சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதன் படி இன்று ( செப்.,12) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு டாக்டர்கள் குழு வரவில்லை இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார்.இதையடுத்து மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலக தயார். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கும் , எனக்கும் நீதி வேண்டும். இவ்வாறு முதல்வர் மம்தா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

nv
செப் 13, 2024 12:25

முதலில் விலகுங்கள்.. நாட்டிற்கு நல்லது


பேசும் தமிழன்
செப் 13, 2024 08:59

உங்களை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை..... மக்களுக்கு உங்கள் மீதான வெறுப்பின் காரணமாக தான்..... உங்களை பதவி விலக வேண்டும் என்று கூறுகிறீர்கள்


Kasimani Baskaran
செப் 13, 2024 05:43

ஒப்புக்கு சொல்லக்கூடாது - செய்து காட்டவேண்டும்.


Iyer
செப் 13, 2024 05:22

உங்கள் மந்திரிசபையில் பல மந்திரிகள் வீட்டில் எண்ண முடியாத அளவுக்கு கரன்சி கட்டுகள் கிடைத்துள்ள்ளன. உங்களுடைய ஆசீர்வாதமும், பங்கும் இல்லாமலா இத்தனை கோடிகளை சேர்த்திருப்பார்கள் உங்கள் சிஷ்யர்கள். பாவப்பட்ட வங்க மக்களின் சொத்துக்களை திரும்ப அவர்களிடம் ஒப்படைத்து விட்டு பிறகு பதவி விலகுங்கள்


தாமரை மலர்கிறது
செப் 13, 2024 01:54

ராஜினாமா செய்துட்டு இத பேசணும். அத விட்டு, வாயால வடை சுடக்கூடாது.


Barakat Ali
செப் 12, 2024 23:30

சொல்லாத ..... செய்யி .......... கவுண்டமணி ஸ்டைல் ......


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 23:04

நாடகம் .....


v j antony
செப் 12, 2024 22:30

மிக முக்கியமான பிரச்சனைகள் வரும் தருணங்களில் தான் ஒரு முதலமைச்சரின் உண்மையான திறமை வெளிப்படும் அந்த வகையில் மம்தா அவர்கள் இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்


Kumar Kumzi
செப் 12, 2024 22:13

மூர்க்க நரிக்குணம் கொண்ட ...கைது செய்து சிறையில் அடைக்கணும்


சிவம்
செப் 12, 2024 22:12

போய் தொலை...


புதிய வீடியோ