உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சலுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹிமாச்சலுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.வடமாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. கடந்த பல வாரங்களாக கொட்டி வரும் இந்த கனமழையால் ஜம்முகாஷ்மீர், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. முக்கிய நகரங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினரும், ராணுவத்தினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந் நிலையில், ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான், தென்மேற்கு உத்தரப்பிரதேசம், வடமேற்கு மற்றும் கிழக்கு மத்தியப்பிரதேசம், ஒடிசாவிலும் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையின் போது, இந்த பகுதிகளில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வானிலை மையம் கூறி உள்ளது.முன்னதாக வானிலை மோசமாக உள்ள காரணத்தால் ஜம்மு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று (செப்.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி