உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான ஒயிட் காலர் பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்

டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான ஒயிட் காலர் பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் உயர் படிப்பு படித்த மருத்துவர்கள் என்பதன் மூலம், வெள்ளை காலர் (White Collor) பயங்கரவாதம் என்ற புதிய பாணியை பயங்கரவாத இயக்கங்கள் கையாண்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வழக்கமான குண்டுவெடிப்பு என்று எப்போதும் போல விசாரணையை துவக்கி விட முடியாது என்பதை உணர்த்தி இருக்கிறது டில்லி கார் குண்டுவெடிப்பு. பொதுவாக பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாதிகள் என்பவர்கள் படித்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்பது பலரின் எண்ணம். இதற்கு உலகம் முழுவதும் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத சம்பவங்களே அதன் சாட்சியாக உள்ளன.இத்தகைய பாணியை புறந்தள்ளி, வெள்ளை காலர் பயங்கரவாதம் (White Collor Terrorissm) என்ற புதிய வழியை பயங்கரவாத இயக்கங்கள் கையாள ஆரம்பித்து இருக்கின்றன. இதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக புலனாய்வு அமைப்புகளால் பார்க்கப்படுவது தான் டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்.இதில் சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவர்கள். அதிலும் உயர்படிப்பான எம்.டி படிப்பை முடித்து, அரசு மருத்துவமனையில் அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாக பழகும் வகையில் தோற்றமளித்த அரசு மருத்துவர்கள். டில்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு 'ஒயிட் காலர்' பயங்கரவாதம் என்ற நுட்பமான பின்னணியை கொண்டு இருக்கிறது. கிராம பகுதிகளில் மத பிரசாரகர்கள் என்ற அடையாளம், நகர் பகுதிகளில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்து சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்கள் என பயங்கரவாதம் வேறு ஒரு ரூபத்தில் உலவி இருக்கிறது. இவர்களின் நிழல், பள்ளி வகுப்பறைகள், மருத்துவமனைகள், பெருநிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், சிறப்புமிக்க பல்கலைகள், அரசு உத்தியோகத்தில் இருத்தல் என சிக்கலான நெட்வொர்க்குடன் தொடர்பு உடையதாக இருக்கிறது. இவர்கள் ஆயுதங்களால், பயங்கரவாத முழக்கங்களை எழுப்பாமல், மவுனியாக இருந்து கொண்டே படித்து, நன்றாக உயர் பதவியில் இருந்தபடியே நிழல் உலக நிதி உதவி மூலமாக பயங்கரவாத செயல்களுக்காக கச்சிதமாக அறுவடை செய்யப்பட்டவர்கள். இந்த ஒயிட் காலர் பயங்கரவாதம் இந்தியாவுக்கு வெளியே பழையது, இங்கு புதியது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது; 9/11 கடத்தல் சம்பவத்தில் உயர்கல்வி படித்தவர்கள் பங்கு அதிகம். வெளிநாட்டில் படித்து, அங்கேயே வாழ்ந்தவர்கள். முன்னணி கடத்தல்காரனான முகமது அட்டா, கெய்ரோ பல்கலையில் கட்டிடக்கலை மற்றும் நகர்ப்பு திட்டமிடல் படிப்பை படித்தவன். அதன் பின்னர் ஹாம்பர்க்கில் நகர்ப்புற வடிவமைப்புத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவன்.ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கமானது, இங்கிலாந்து, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ மாணவர்கள், இளம் மருத்துவர்களை வெற்றிகரமாக ஆள்சேர்ப்பு பணியில் சேர்த்ததை அறிய முடிகிறது. இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை அரங்கேற்றியவர்கள் மிகவும், பணக்கார,வசதியான வணிக குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.ஐஎஸ்ஐஎஸ் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி இஸ்லாமிய ஆய்வு படிப்பில் முனைவர் (PhD) பட்டம் பெற்றவன். கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர்கள் எல்லோரும் உலகம் தேடிய கொடூர பயங்கரவாதிகள். அந்த வகையில், தற்போதைய டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அனைவரும் மருத்துவர்களாக உள்ளனர். இந்த சம்பவத்தின் தொடர் விசாரணையில் ஷாஹீன் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவில் அதுவும் தலைநகர் டில்லியில் இது போன்ற ஒயிட் காலர் பயங்கரவாதம் புதியது. இது ஒரு பெரும் அபாயத்தை குறிப்பதாக உள்ளது.இவ்வாறு ஓய்வு பெற்ற அந்த காவல் துறை உயரதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Palaniraj Seeniappan
நவ 11, 2025 23:02

its better to monitor all the worship place of all religion with CCTV and all the leader for the worship place monthly meeting review and some sort of action plan to be made to monitor all this appropriate law amendment also to be done .


Karunakaran
நவ 11, 2025 22:30

திருந்து இந்துவே திருந்து, அனைத்திலும், முக்கியமாக உனது உணவு முறையிலும், நீ காசாப்பு தின்பதால் தான் உன் அதிக பணம் அவனிடம் செல்கிறது, உஷார் உஷார், உன் பணத்தை கொண்டே உன்னை அழிப்பான், முழித்துக்கொள் போலி மத சார்பின்மை கடைபிடிப்பவனே, முழித்துக்கொள்,


Kalyan Singapore
நவ 11, 2025 22:22

பாகிஸ்தானின் ஆயுதங்கள் அவர்களுக்கே திரும்புகிறது . BBC Hindi தகவலின் படி 2 மணி நேரம் முன்பு ராவல்பிண்டியில் பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் அருகே ஒரு கார் வெடித்துச்சிதறி 12 பேர் கொல்லப்பட்டனர் . பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் இதை செய்திருக்கலாம் என அரசு நம்புகிறது


R.MURALIKRISHNAN
நவ 11, 2025 22:14

நாட்டை சுரண்டி நாட்டிற்கு எதிராக வன்மம் கொண்ட இவர்களை போல் உள்ளவர்களை கல்லெறிந்து தொல்ல வேண்டும்


R. SUKUMAR CHEZHIAN
நவ 11, 2025 22:08

இந்த பயங்கரவாத ஜிகாதி கும்பல்களை கழுவி நடுவீட்டில் வைத்தாலும் புத்தி மலத்தை திங்கதான் போகும்.


RK
நவ 11, 2025 21:33

இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.


ராம்
நவ 11, 2025 21:07

இந்த செய்திக்கு இப்போ இங்கே ரஹீம்னு ஒருத்தர் கருத்து போடுவார் பாருங்க.


kumaran
நவ 11, 2025 20:36

தீவிரவாதிகள் எந்த நாட்டிலிருந்தோ வந்து தாக்குதல் செய்தால் உளவுத்துறை தோல்வி எனலாம் ஆனால் இங்கே தடுக்கி விழுந்தால் தீவிரவாதிகள் எதுவும் தெரியாத மாதிரி நமது உறவினர்கள் போல இருக்கிறது நமக்கு எப்போதுமே ஆபத்து. மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்கிறோம்.


GMM
நவ 11, 2025 20:32

தவறான போதனை நியாய படுத்தி கற்பிக்க முடியும். திரை மறைவில் இருக்க வேண்டிய சதிகள், மேற்கத்திய நாடுகள் விரும்பும் மத சுதந்திரம் மற்றும் மனித உரிமை வாதங்களின் போர்வையில் சட்ட பூர்வமாக உருவாக்கப்படுகிறது. ஆனால் மதவாத அழிவின் விளிம்பில் ஐரோப்பிய நாடுகள். இந்தியாவில் இரு அந்நிய மதம் மாற்ற தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்த அதிகாரம் உடைய குடியுரிமை வழங்க வேண்டும். இவர்களிடம் வரி வசூல் கூடாது. கல்வி, மருத்துவ, அரசு உதவி கூடாது. சீனா, ரஷியா பாதுகாப்பில் இருக்கும். இந்தியா?


G Mahalingam
நவ 11, 2025 20:31

படித்தவருக்கு வாடகைக்கு வீடு கொடுப்பார்கள். இப்போது படித்துவரும் தீவீரவாத‌ செயலில் ஈடுபட்டால் வீடு வாடகைக்கு கிடைப்பது கடினம்.‌


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை