உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி; முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு

27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சி; முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு

புதுடில்லி: டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய தலைநகர் டில்லி சட்டசபைக்கு கடந்த, பிப்.,5ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 70 இடங்களில், 48 இடங்களில் வென்று பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. இதன் வாயிலாக, 27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8hh99uta&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டில்லி ராம் லீலா மைதானத்தில் இன்று (பிப்.,20) பதவியேற்பு விழா நடந்தது. டில்லியின் முதல்வராக, பா.ஜ.,வின் முதல் முறை எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இவருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர் டில்லியின் 4வது பெண் முதல்வர் ஆனார். ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்தராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.

வழிபாடு

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ரேகா குப்தா, தலைமைச் செயலகம் சென்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பிறகு யமுனை நதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து டில்லி அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்துவது எனவும், தலைமை தணிக்கை கணக்காளர் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இலாகா ஒதுக்கீடு

முதல்வர் ரேகா குப்தா - நிதித்துறை, வருவாய், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைஆஷிஷ் சூட் - உள்துறை, எரிசக்தி, கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைபர்வேஷ் வர்மா - பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு துறைபங்கஜ் குமார் சிங்- குடும்பம் மற்றும் சுகாதாரத்துறைரவிந்தர் சிங் - சமூக நீதி, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறைகபில் மிஸ்ரா- சட்டம் மற்றும் நீதி, தொழிலாளர் நலத்துறைமன்ஜிந்தர் சிங் சிர்சா - வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, உணவு மற்றும் விநியோகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யார் இந்த ரேகா குப்தா?

* ஹரியானாவில் பணியா சமூகத்தைச் சேர்ந்தவர் ரேகா குப்தா. இவருக்கு வயது 50. தற்போது டில்லி பா.ஜ.,வின் பொதுச் செயலராக உள்ளார்.* பா.ஜ.,வின் மகளிர் பிரிவு தேசிய துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து, 29,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.* சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு, வென்று, முதல்வராக உள்ளார். வழக்கறிஞரான இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மாணவர் பிரிவான, ஏ.பி.வி.பி.,யில் தன் அரசியல் பயணத்தை துவக்கினார்.* கடந்த, 1997 - 1997ல் டில்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவரானார். உத்தரி பீதம்புராவில் இருந்து, கவுன்சிலராக, 2007 மற்றும் 2012ல் தேர்வானார். தெற்கு டில்லி மாநகராட்சி மேயராகவும் இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:16

நல்ல நிர்வாகத்தைக் கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது..... பாராட்டுக்கள் ...


சாம் பரோட்டா, சாயர் புரம்
பிப் 20, 2025 17:30

நேரு பிரதமராக இருந்தபோது 7 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 49 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது 6 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது 11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை ஒரு மாநில அரசு கூட கலைக்கப்படவில்லை. ஆனால் மோடி ஒரு சர்வாதிகாரியாம்? வாழ்க பாரதம் ! வந்தே மாதரம் !


Rengaraj
பிப் 20, 2025 16:53

ஆம் ஆத்மியால் ப்ரயோஜனமில்லை , டில்லிக்கு வளர்ச்சி தேவை என்று அம்மக்கள் காங்கிரசுக்கு வோட்டுப்போட்டிருக்கலாமே ? ஏன் செய்யவில்லை. ? சுயேட்சைக்கு போட்டிருக்கலாமே ஏன் பாஜகவை தெரிவுசெய்தார்கள் ? பாஜகவை ஏன் தேர்ந்தேடுக்க வேண்டும். ?


Perumal Pillai
பிப் 20, 2025 16:22

ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ள உலக மகா திருடன் கேஜ்ரிவாலுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் .


venkatan
பிப் 20, 2025 16:21

டில்லியை மீண்டும் புதுடில்லியாகவும், தலை நகரை ,தலைமை மற்றும் முதன்மை நகராக்கியும் மாசற்ற காற்று, தூயமையான யமுனைத் தண்ணீர், போக்குவரத்து நெரிசலின்மை, ஊழலற்ற வெளிப்படையான மற்றும் பதிலளி க்கக்கூடிய செயலாற்றல் நிர்வாகம் போன்றவற்றிற்காக உங்களுக்கு மக்கள் வோட் செய்திருக்கிறர்கள். அவைகளை மனப்பூர்வமாக நிறைவு செய்ய பணி புரியுங்கள்.


ரத்னா
பிப் 20, 2025 15:09

பெண்கள் உரிமைத் தொகை எப்போலேருந்து குடுப்பீங்கம்மா?


Bala
பிப் 20, 2025 14:41

வாழ்த்துக்கள் அம்மா


Jay
பிப் 20, 2025 14:37

பரம்பரை அரசியல் குடும்பம் அல்லாமல் ஒருவர் முதல் ஆவது தற்போது பாஜகாவில் மட்டும்தான் முடியும். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, எல்லாம் குடும்ப ஆட்சி மட்டுமே. அந்த வகையில் அதிமுக பரவாயில்லை


Oviya Vijay
பிப் 20, 2025 14:21

இது பெருமையான விஷயம் அல்ல... கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி அரசுக்கு பல்வேறு வகையில் முட்டுக்கட்டையிட்டுவிட்டு இப்போது ஏதோ யோக்கியர்கள் மாதிரி நடிப்பது எவ்வகையில் நியாயம்... டில்லி மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது டில்லியின் வளர்ச்சியை எதிர்பார்த்து தானே ஒழிய உங்கள் கட்சிக்காக அல்ல. உங்கள் கட்சிக்காக அவர்கள் ஓட்டளித்ததாக நீங்கள் நினைத்தால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் மத்தியில் நீங்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் உங்களால் டில்லியில் ஜெயிக்க முடியவில்லையே. கட்சிகளுக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை தவிர்க்கவே இனியாவது டில்லியின் வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்...


Bala
பிப் 20, 2025 14:40

திமுகவிற்கு சரியாக பொருந்தும் வாசகங்கள் " வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்... - இப்படிக்கு தமிழக மக்கள்


guna
பிப் 20, 2025 15:10

இங்கு திமுக விற்கும் இதே நிலை தானே???


guna
பிப் 20, 2025 15:11

பாவம் இவர்....என்ன சொல்வது...முட்டு குடுத்து முட்டு குடுத்து....எல்லாமே வீண்


Tc Raman
பிப் 20, 2025 16:08

45 கோடிக்கு அக்கல் பணத்தை கொள்ளை அடித்து கெஜ்ரிவால் தனக்கென பங்களா கட்டி கொண்டது உங்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லையா? அது ஒரு காரணம் என நீங்கள் நினைக்கவில்லையா? .


Venkatesan Srinivasan
பிப் 20, 2025 16:33

திருவாளரே இந்த ஒப்பற்ற தத்துவத்தை மற்ற எந்த தருணத்திலும் எல்லா கட்சிகளும் வெற்றி பெறும்போது குறிப்பிட்டு தங்கள் நடுநிலைப் பாட்டை வெளிப்படுத்துவீரா? ஏதோ டில்லி வாக்காளர்கள் மட்டுமே கட்சி சார்பற்று தங்கள் நலன்கருதி வாக்களித்தது போலவும் கருத்து வெளியிட்டுள்ளீர். டில்லி வாக்காளர்கள் ஒரு சரித்திர பிழைக்கு பிராயச்சித்தம் செய்துள்ளனர். நாட்டையே ஆளும் அதிகார பொறுப்பில் ஒரு இயக்கம் - புவியியல் சார்ந்த - தலைநகரில் இருக்கும் போது ஒரு எதிர்வினை இயக்கம் அங்கே அமைய அங்கிருக்கும் மக்கள் வாக்களிப்பது கண்ணில் விழுந்து உறுத்தும் தூசு போல். ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் டில்லி தலைநகரில் எண்ணற்ற குழப்பங்களுக்கும் கலவரங்களுக்கும் ஆதரவாக இருந்தது. உண்மையில் விவசாயிகள் கிளர்ச்சி என்ற போர்வையில் எண்ணற்ற தேச விரோத சக்திகள் தலைநகரில் முகாமிட உறுதுணையாக இருந்தது. இத்தகைய இடர்பாடு வேறெந்த வளர்ந்த நாடுகளிலும் காணப்படாது. தேவையெனில் டில்லி பிரதேசத்தின் மொத்த ஆட்சி அதிகாரமும் நேரிடையாக மத்தியில் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும். எதிர்மறை சக்திகள் அரசியல் கட்சிகள் மற்றும் எந்த உருவத்திலும் நிலைக் கொள்ள அனுமதிக்கலாகாது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:19

இதை நீங்க தமிழகத்தில் நடக்கும் கிம்ச்சை அரசரின் நிர்வாகத்துக்கும் சொல்லலாமே நடுநிலையாளரே ??\ வளர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் உங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்... உங்கள் இடத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல் மீண்டும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவீர்கள்... ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்... //


நாஞ்சில் நாடோடி
பிப் 20, 2025 14:01

வாழ்த்துக்கள் ...