உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோனியா விஹாரில் கே.வி.பள்ளி முதல்வர் ரேகா குப்தா தகவல் முதல்வர் ரேகா குப்தா தகவல்

சோனியா விஹாரில் கே.வி.பள்ளி முதல்வர் ரேகா குப்தா தகவல் முதல்வர் ரேகா குப்தா தகவல்

புதுடில்லி:“சோனியா விஹாரில் புதிய கேந்திரிய வித்யாலயா அமைக்கப்படும்,” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். இதுகுறித்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா,கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, தலைநகர் டில்லி உட்பட நாடு முழுதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் கல்வி முறையை வலுப்படுத்தும் இந்த திட்டத்தால், கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும். வடகிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் சோனியா விஹாரில் கஜூரி காஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்படும். இதற்காக, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, டில்லி அரசு நிலம் வழங்கியுள்ளது . ஒன்றாம் முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் முதலில் துவக்கப்படும். இந்தப் பள்ளிக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பள்ளி சிவில் துறையின் கீழ் செயல்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும். டில்லியில் தற்போது 46 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ