உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எமர்ஜென்சி ரிலீஸ் இல்லை: கங்கனா படத்துக்கு தொடரும் சிக்கல்!

எமர்ஜென்சி ரிலீஸ் இல்லை: கங்கனா படத்துக்கு தொடரும் சிக்கல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கங்கனா ரனாவத் நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது மக்கள் கேட்ட, அனுபவித்த வார்த்தை. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். இந்திராவின் அரசியல் நடவடிக்கைகள், எமர்ஜென்சி அமலான போது நிகழ்ந்தவை, அவர் சுட்டுக்கொல்லப்பட்ட போது அரங்கேறிய சம்பவங்கள் படத்தில் காட்சிகளாக வருகிறது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாகவும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

சில காட்சிகளை நீக்குங்க!

டிரெய்லர் வெளியீடு பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வாரியத்திடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டு, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இன்னும் சில காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டதால், படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக படக்குழுவினர் கேட்டபோது, ஒவ்வொரு சமூகத்தினரின் உணர்வுகளையும் கருத்தில் கொள்வதாக தணிக்கை வாரியம் கூறியுள்ளது.

மிகவும் வருத்தம்

சமீபத்தில், 'இந்திரா கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்டக்கூடாது என்று எங்களுக்கு அழுத்தம் வருகிறது. படத்தில் என்ன காட்சி அமைப்புகள் இடம்பெற்று உள்ளன என்ற கேள்வியும் பலமாக எழுகிறது. என்னால் எதையும் நம்பமுடியாத தருணமாக உள்ளது. நாட்டில் தற்போது நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என கங்கனா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
செப் 02, 2024 12:53

அவசரநிலைக் காலத்தில் அகாலிதளம் பல எதிர்கட்சி தலைவர்களுக்கு பொற்கோவிலில் அடைக்கலம் அளித்தது. ரகசிய ரேடியோ நிலையமும் நடத்தியதாக செய்தி. அதற்குப் பழிவாங்க அகாலிகளுக்கு எதிராக பிந்தரன்வாலேவை உருவாக்கி வளர்த்தது இந்திரா. இன்னும் கூட அந்த சதியைப் புரிந்து கொள்ளாமல் பல சீக்கியர்கள் பயங்கரவாதி பிந்தரன்வாலேவை தெய்வ உருவமாக நினைப்பது தவறு.


Sankara Subramaniam
செப் 02, 2024 12:09

யோகி மஹாராஜ் தான் சரியான தலைவர் இந்துக்களின் பாதுகாப்புவிற்கு


ஆரூர் ரங்
செப் 02, 2024 11:47

வந்தேறி முகலாயர்களிடமிருந்து ஹிந்துக்களைக் காக்க ஹிந்து வீரப் பரம்பரையால் உருவான பிரிவுதான் சீக்கியம். அது ஹிந்து மதத்தின் பகுதியே. பிரித்தாளும் சூழ்ச்சியாகவே ஆங்கிலேயர் அவர்களை தனி மதமாக நினைக்க வைத்தான். பத்து சீக்கிய குருமார்களில் யாருமே தனி மதத்தை உருவாக்கவில்லை. சீக்கியர்களிடம் பேசி அவர்கள் தனி மதம் இல்லை எனப் புரியவைக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


kantharvan
செப் 02, 2024 12:23

இதை ஏன் இந்திய இந்துக்களிடம் புரிய வைக்க கூடாது .


சிவம்
செப் 02, 2024 10:18

சீக்கியர்களுக்கு என்ன பிரச்சினை. உங்கள் பொற்கோயிலில், இந்திராகாந்தி ராணுவத்தை அனுப்பி சோதனை செய்தார் என்றுதானே அவரை சுட்டு கொன்றீர்கள். மேலும் அப்போதே அமெரிக்க ஆதரவுடன் நாட்டை பிரிக்க பிந்தரன்வாலே செய்த சூழ்ச்சியை தற்போது உள்ள இளைஞர்கள் தெரிந்து கொண்டு காரி துப்பி விடப் போகிறார்களே என்ற அச்சம் தான் சீக்கியர்களுக்கு. கங்கணவிற்கு மத்திய அரசு படத்தை வெளியிட உதவவேண்டும் என்று கேட்பதே வெட்கக்கேடு.


Nandakumar Naidu.
செப் 02, 2024 10:09

பிஜேபி ஆட்சியில் இருந்தும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையே உள்ளது. உடனடியாக இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். காமன் சிவில் கோடு அமல்படுத்த வேண்டும். அதற்கு யோகிச்சு தான் பிரதமராக வர வேண்டும்.


Apposthalan samlin
செப் 02, 2024 09:58

எந்த மாநில மக்களிடம் விளையாடலாம் சீக்கியர் மீது கை வைப்பதும் தேன் கூட்டில் கள் எறிவதும் ஓன்று .பிஜேபி அரசுக்கு இது நன்றாக தெரியும் .


ஆரூர் ரங்
செப் 02, 2024 11:49

எந்தக் கள்? தென்னங் கள்ளா அல்லது பனங்கள்ளா?


சிவம்
செப் 02, 2024 12:15

சீக்கியர்கள் தேன் கூடு என்றால், இந்துக்கள் யார். ஒப்பீடே சரியில்லையே!


Ganapathy
செப் 02, 2024 12:25

அதானே தமிழர் இளிச்ச வாயர்களாச்சே...நீட் வச்சு ஏமாற்றிய திராவிடம் இப்ப கார்பந்தயம் வச்சு ஏமாத்துது...கள்ளக்குறிஞ்சீல வேங்கைவயல்ல என்ன ஆனா எனக்கென்ன...எனக்கு மக்கள் வரீல குடும்பத்தோட அமெரிக்கா போய் டோபா போட்டுகினு ஜிம்ல போட்டோஷுட் பண்ணி அப்படியே மால் போய் அங்க சின்னபுள்ள விளைய்ட்டு விளையாடி போட்டோ புடிச்சு போட்டு தமிழர்களை கிறுக்கனாக்கலாம்..2026லயும் ஓட்டு எனக்குதான்...லயும் எஇதெல்லாம் பஞ்சாப்ல முடியாதுல்ல..


kantharvan
செப் 02, 2024 12:25

கள் குடித்து கல்லடி வாங்காமல் ஓய மாட்டான் .


புதிய வீடியோ