வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம், நாங்கள் தேர்தலுக்குள் அதை ஆட்டையைப் போட்டு முடிக்கணும்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை, 6 சதவீத வட்டியுடன் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய புதிய தேசிய கல்வி கொள்கை மற்றும் பி.எம்., ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்காததால், 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,291 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. சமச்சீர் கல்விஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விபரம்:சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிலையங்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை அணுகினால், பி.எம்., ஸ்ரீ திட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே இந்த தொகை விடுவிக்கப்படும் என கூறுகின்றனர்.புதிய கல்வி கொள்கையின்படி, மும்மொழி கொள்கையை எங்களால் ஏற்க முடியாது. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், நிதியை காரணம் காட்டி, எங்கள் மாநில கொள்கைக்கு முரணான ஒரு கொள்கையை கட்டாயப்படுத்தி ஏற்கச் சொல்வது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இந்த புதிய கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு முன்பாகவே, 2010ல் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிடுவதோடு, தமிழகத்திற்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் நிதியை, 6 சதவீத வட்டியுடன் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.800 பக்க மனுமத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில், 43 லட்சத்து 94,000 மாணவர்கள், இரண்டு லட்சத்து 21,000 ஆசிரியர்கள், 32,000 அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மொத்தம், 800 பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த மனுவில், நிதியை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வரும், பள்ளிக்கல்வித் துறையும் மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களின் நகல்களும் இணைக்கப்பட்டுள்ளன.- டில்லி சிறப்பு நிருபர் -
ஆமாம், நாங்கள் தேர்தலுக்குள் அதை ஆட்டையைப் போட்டு முடிக்கணும்.