உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி, தாயார் ஏஐ வீடியோக்களை நீக்குங்கள்: காங்கிரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பிரதமர் மோடி, தாயார் ஏஐ வீடியோக்களை நீக்குங்கள்: காங்கிரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பாட்னா: பிரதமர் மோடி, அவரின் தாயார் ஆகியோரின் ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு காங்கிரசுக்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகளும் அணிகளை கட்டமைத்து பல கட்ட பிரசாரங்களையும் தொடங்கி உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4k0dero9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பாக பீஹார் காங்கிரஸ் கட்சியானது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வீடியோ ஒன்றை செப்.10ம் தேதி வெளியிட்டு இருந்தது. அதில் பிரதமர் மோடி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் பேசிவிட்டு உறங்கும்போது கனவில் அவரின் தாயார் உருவத்தில் தோன்றும் ஒருவர் பேசுவதாகவும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அவர் பீஹார் அரசியல் குறித்து விமர்சிப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக கண்டனங்கள் எழுந்தன. ஏராளமான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து, பாஜ தேர்தல் பிரிவைச் சேர்ந்த சங்கேத் குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) பஜான்த்ரி, சமூக வலைதளங்களில் காணப்படும் அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
செப் 17, 2025 17:14

தங்கள் செய்திகளில் கூட சில புகைப்படங்கள் ஏ.ஐ மூலமாக வெளியிடுகிறீர்களென்று நினைக்கிறேன். அதை தவிருங்கள் அய்யா, ஏதோ கட்டு கதைகளுக்கு வெளியிட்ட படங்கள் மாதிரி இருக்கின்றன. உண்மை செய்திகளுக்கு உண்மையான திருடன், போலீஸ், நாய், சிறுவர்கள் படங்களை வெளியிட்டால் நன்று.


Sudha
செப் 17, 2025 16:44

2026 க்கு காங்கிரஸ் தடை செய்யப்படும்


வாய்மையே வெல்லும்
செப் 17, 2025 16:30

கோர்ட் இந்த மாதிரி கேடுகெட்ட மூன்றாம்தர ஜித்து விளையாட்டு காட்டுகிறவர்களுக்கு அதன் பொறுப்பாளருக்கு ஐம்பது கோடி நஷ்டஈடுடன் இதற்கு காரணமான பப்பு சோனியா இத்யாதிகளை ஐந்தாண்டு அரசியலிலேயே இருக்க முடியாத படி பெனால்டி வைக்கணும் .


Rathna
செப் 17, 2025 16:22

தனது தரத்தை எப்படி காட்டுவது இப்படியா??


raju
செப் 17, 2025 16:14

கோர்த்தாவது ஹ ராஜாவாவது


V Venkatachalam
செப் 17, 2025 15:27

கான்+கிராஸ் உயிருக்கு போராடுகிறது. ஒரு சின்னஞ்சிறு துரும்பு கிடைத்தாலும் அதை பிடித்து உயிரை காப்பாற்ற முடியாத என்று பார்க்கிறது. அதை குற்றுயிராக்கியதற்கு காரணம் உலக தலைவர் மோடிதான். எனவே உயிர் போவதற்கு முன்னரே மோடியை இழுத்து தள்ளிவிட அத்தனை தகிடுதத்தமும் வெறிபிடித்தவன் போல பண்ணிக்கொண்டு இருக்கிறது. முன்னாடி கான்+கிராஸ் காரனுங்க அவிங்க அம்மா அன்னை? சோனியா மோடி அவர்களை மரண வியாபாரி என்று கூச்சமே இல்லாமல் பேசினாள்.


M Ramachandran
செப் 17, 2025 15:03

அகில இந்திய ஒரு அரசியல் கட்சியான காங்கரஸ் கீழ் தரமாக போக மனம் எப்படி வந்தது.


தமிழ்வேள்
செப் 17, 2025 15:38

சோனியா காங்கிரஸ் , ஒரு சராசரி நாகரிக்கமுள்ள கட்சி என்று யார் சொன்னது ? டிஸ்கி :-உங்களது மூட நம்பிக்கைகளுக்கு காங்கிரஸ் பொறுப்பல்ல ...


சமீபத்திய செய்தி