உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல மலையாள இயக்குனர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

பிரபல மலையாள இயக்குனர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார்

கோழிக்கோடு: பிரபல மலையாள சினிமா கதாசிரியர், இயக்குனர் எம்.டி. வாசுதேவ நாயர் ,91 உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியர், இயக்குனர் என அனைவராலும் போற்றப்பட்டு வருபவர் எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர். 91 , 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர் .1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார்.மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973 இல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும், 2005-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும், கேரள சாகித்ய அகடாமி விருதையும் பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிச.25) இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M. PALANIAPPAN
டிச 26, 2024 09:52

எம். டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு ஆழ்த்த இரங்கல் , அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 26, 2024 09:09

இவர் மேல குற்றச்சாட்டு எதுவும் இல்லீங்களா ????


babusrinivasan
டிச 26, 2024 08:59

RIP


Subramanian
டிச 26, 2024 08:34

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Narayanan K
டிச 26, 2024 08:08

A great loss to the Malayalam Literature. His way of story telling and style is unique and there is no unnecessary hype or over imagination. Also he has done script writing for few films. One of my Fav writer in malayalam. May his soul attain the lotus feet of the lord


MARI KUMAR
டிச 26, 2024 07:34

Rip??


புதிய வீடியோ