உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் இறுதிக் கட்டத்தில் மீட்புப்பணி: கேரள முதல்வர் தகவல்

வயநாட்டில் இறுதிக் கட்டத்தில் மீட்புப்பணி: கேரள முதல்வர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வயநாட்டில் மீட்புப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது: நிலச்சரிவில் சிக்கியவர்களில் இன்னும் 206 பேரை காணவில்லை. 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்ட மருத்துவமனைகளில் 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,042 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். பேரிடர் குறித்து முன்னரே எச்சரிக்கை அமைப்புகளை மீண்டும் ஆய்வு செய்வதுடன், பருவநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்.சூரமலையில் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு டவுன்ஷிப் அமைக்கப்படும். அங்கு, 100 வீடுகள் கட்டி தருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். வீடுகளை இழந்தவர்களுக்காக 100 வீடுகள் கட்டித் தருவதாக கர்நாடக முதல்வரும் தெரிவித்து உள்ளார். பேரிடர் மீட்பு நிவாரண பணிக்கு யுபிஐ ஐடி மற்றும் நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஆக 03, 2024 23:14

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு நிதியுதவி கட்டாயம் செய்யாது.அது தவிர மற்ற எல்லா உதவிகளையும் செய்வது போல் நடிக்கும் என்பது தெரிந்ததே!


Ramesh Sargam
ஆக 03, 2024 20:04

மீட்ப்புப்பணிகள் முழுமை அடைந்தபிறகு, கேரளா முதல்வர் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவார். அதில் நிவாரணமாக ஒரு பத்தாயிரம் கோடி கேட்பார் பாருங்க, நமக்கு தலையே சுத்திடும். கொடுக்காவிட்டால் ஒரே ரகளைதான், போராட்டம்தான்.


S. Narayanan
ஆக 03, 2024 19:49

கேரள மாநில அரசு நிர்வாகம் சரியாக செயல் படாததால் இவ்வளவு இழப்பு.


S. Narayanan
ஆக 03, 2024 19:47

ஏதோ வாய் தவறி சொல்லி விட்டோம் என்று ராகுல் நினைப்பார.அல்லது சொன்னதை நிறைவேற்றுவாரா.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி