உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியலைமைப்புகளுக்கு எதிரானது என்று ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடகா அரசு அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் ஹொசபலே கூறியதாவது; மத அடிப்படையிலா இடஒதுக்கீடுகளை அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளாது. அப்படி செய்பவர்கள் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள். ஒருங்கிணைந்த ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா இருந்த போது, முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஐகோர்ட்களும், சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்தது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Unknown
மார் 24, 2025 13:56

அறிய வகை ஏழைகளின் 10% இடஒதுக்கீடு என்ன சொல்லப்போற அது மட்டும் அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு எதிராக இருக்காத


naranam
மார் 24, 2025 06:51

கான்கிராசின் மக்களை பிளவுபடுத்தும் கீழ்த்தரமான திட்டம் இது. தடை செய்யப் படவேண்டும்.


நிக்கோல்தாம்சன்
மார் 24, 2025 02:34

அப்போ கோர்ட்டுக்கு போயி தடை உத்தரவு வாங்குங்க ?


Shankar
மார் 24, 2025 00:06

இன்னும் எதுஎதுல தான் இடஒதுக்கீடு கொடுப்பாங்க? எல்லாம் ஓட்டு பிச்சை எடுக்கத்தான் இதுபோன்ற வேலைகளை காங்கிரஸ் கட்சி அக்காலம் முதல் இக்காலம் வரை செய்துகொண்டிருக்கிறது.


Mediagoons
மார் 23, 2025 22:50

100 சதவீத நாடும் அந்நியர்களுக்கு அன்னையர்களை கவர் விற்கப்பட்டுவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை