உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை மதிக்க வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

அரசியலமைப்பை மதிக்க வேண்டும்: ராகுலுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது அதனை மனதார மதிக்க வேண்டும்' என காங்கிரஸ் எம்பி ராகுலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார்.எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசுபவர்கள் அதன் உணர்வை காக்க தவறிவிட்டனர். எமர்ஜென்சிக்கு இன்னும் மன்னிப்பு கேட்காதவர்களிடம், அரசியலமைப்பு சட்டம் பற்றி நீங்கள் என்ன மரியாதையை எதிர்பார்க்க முடியும். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி சுற்றி திரிவதால் எதுவும் நடக்காது. அதை மனதார மதிக்க வேண்டும்.நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே முன்னாள் பிரதமர் இந்திரா எமர்ஜென்சியை பிறப்பித்தார். 1975ம் ஆண்டு எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது நான் ஒரு மாணவனாக இருந்தேன். என்ன நடந்தது, எல்லோரும் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அப்போது நான் கற்றுக்கொண்ட பாடம், சுதந்திரத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது தான்.எமர்ஜென்சியின் போது, ​​அரசியலமைப்பு 5 முறை திருத்தப்பட்டது. அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எமர்ஜென்சி கொண்டு வந்ததற்காக இந்திரா குடும்பத்தினர் ஒருபோதும் வருத்தம் தெரிவித்ததில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் அதை எதிர்த்தனர். இது, ஜனநாயகம் இந்தியர்களின் ரத்தத்தில் ஓடுகிறது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூன் 27, 2025 20:12

முதலில் ராகுலுக்கு அரசியலமைப்பு என்றால் என்னவென்று தெரியுமா?


Venkatesan Srinivasan
ஜூன் 27, 2025 22:48

அது என்னவோ அந்த ஆள் கையில் கருப்பு சிவப்பு அட்டை போட்ட தீயமுக புத்தகமாக இருக்கும். நாம் அரசியலமைப்பு புத்தகம் என்று எண்ணினால் அது நம் தப்பு‌ .


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 20:03

அவர் என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்.... மூளை இருந்தால் யாராவது தன் தாய்நாட்டை பற்றி அடுத்த நாட்டில் போய் குறை சொல்வார்களா ???... சரி சரி அவரது தாய்நாடு இத்தாலி தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.


C.SRIRAM
ஜூன் 27, 2025 18:08

நீங்க தான் மெகா காமெடி பீசு . தனது பணியை அமைச்சர் மிக சிறப்பாக செய்கிறார் . வெட்டி கருத்து ஏதும் கூடாது


P. SRINIVASAN
ஜூன் 27, 2025 17:36

அரசியலமைப்பை மதிக்கிரத்தை பத்தி பிஜேபி பேசுவதுதான் வேடிக்கை.


மூர்க்கன்
ஜூன் 27, 2025 16:35

யாரு இவர் காமெடி பீசு?? உலகத்துல ஒரு பயலும் இவர் பேச்சை மதிக்க மாட்டேன்கிறான்...


ஆரூர் ரங்
ஜூன் 27, 2025 16:25

கரை வேட்டிகளை ஒளித்துவைத்துவிட்டு பயத்துடன் ஒளிந்து திரிந்த திமுக வினர் எமெர்ஜென்சி கொடுமைகளை மறந்துருங்க மாட்டாங்க. இப்போ (முழு சுதந்திரத்துடன்) மத்திய அரசு உரிமைகளைப் பறிப்பதாக பொய்பேசும்போது உடனிருக்கும் காங்கிரசு அவசர நிலையில் படுத்தியபாட்டை நினைவில் வைத்துப் பேசவும். பிரதமராக ராஜிவ் காந்தி கூட பார்லிமெண்டில் அவசர நிலையை நியாயப்படுத்தினார். இந்திரா கடைசிவரை மன்னிப்புக் கேட்கவில்லை.


A viswanathan
ஜூன் 27, 2025 17:22

அவனோட தாய் நாடாக இருந்தால் மதிப்பான்.அவனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை