உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்புடன் தேர்தல் பணி மைசூரு கலெக்டர் உத்தரவு

பொறுப்புடன் தேர்தல் பணி மைசூரு கலெக்டர் உத்தரவு

மைசூரு : ''தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பொறுப்புடன் செய்ய வேண்டும்,'' என, மைசூரு கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டார்.லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மைசூரு மாவட்டம், கே.ஆர்., நகர் தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், மைசூரு கலெக்டர் ராஜேந்திரா பேசியதாவது:தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை பொறுப்புடன் செய்ய வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் நேரில் சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.பதற்றம், மிக பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் போலீசார், ஓட்டுச்சாவடி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்க வேண்டும். அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் தொடர்பான போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி