உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எலான் மஸ்க் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி; ஓய்வு பெற்ற பைலட் கண்ணீர்

எலான் மஸ்க் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி; ஓய்வு பெற்ற பைலட் கண்ணீர்

புதுடில்லி:அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பெயரில் ஓய்வு பெற்ற பைலட் இடம் 72 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த முன்னாள் பைலட் சக்தி சிங் லும்பா. இவரிடம் எக்ஸ் சமூக ஊடகம் மூலமாக அறிமுகமான ஒருவர், தான்எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் மேலாளர் அன்னா ஷெர்மன் என்று கூறியுள்ளார்.உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை சந்திக்க வாய்ப்பு தருவதாகவும் சொல்லி உள்ளார். ஷெர்மன், மாய் மஸ்க் என்ற மற்றொரு எக்ஸ் தள கணக்கை பின்தொடர லும்பாவை வற்புறுத்தினார், இது எலான் மஸ்க்கின் தாயார் என்றும் கூறினார். எக்ஸ் தளத்தில் நடந்த பரிமாற்றங்களின் போது, ​​மாய் மஸ்க் என்று காட்டிக் கொண்ட நபர் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தினார்.மேலும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் தாயுடன் தான் உரையாடுவதாக லும்பாவை நம்ப வைத்தார்.இதற்கிடையில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவில் முதலீடு செய்தால், மஸ்க் இந்தியா வரும்போது சந்திப்பு ஏற்பாடு செய்வதாக அன்னா ஷெர்மன்உறுதி கூறினார். அதை லும்பா நம்பினார்.இந்த வலையில் சிக்கிய லும்பா, அன்னா ஷெர்மன் மூலமாக ஆரம்பத்தில் ரூ.2.91 லட்சத்தை முதலீடு செய்தார்.அவரது முதலீடுகள் வளர்ந்து வருவதாக அவருக்குஅன்னா ஷெர்மன் தொடர்ந்து உறுதியளித்தார். மேலும் முதலீடு செய்யவும் வற்புறுத்தினார்.ஒரு கட்டத்தில், லும்பாவுக்கு ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தின் புகைப்படத்தை அனுப்பி, அது விரைவில் உங்களுக்கு பரிசாக அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். அந்தப் படத்தை எலான் மஸ்க் அனுப்பியதாக லும்பாவை நம்ப வைத்தனர்.இதைத்தொடர்ந்து லும்பா இவ்வாறு தொடர்ந்து தனது முதலீடு பணத்தை கொடுத்து கொண்டே இருந்தார், இறுதியில் ரூ.72.16 லட்சம் முதலீடு செய்த நிலையில் அவருக்கு பணம் தேவைப்பட்டது. தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க விரும்பிய போது, அவரால் எடுக்க முடியவில்லை.ஏதோ தவறு இருப்பதாக சந்தேகம் அடைந்த லும்பா தனது பணத்தைத் திரும்பக் கேட்டார். உங்கள் கணக்கு முடக்கப்பட்டதாகவும், மஸ்க் தனது இந்தியா வருகையின் போது தனிப்பட்ட முறையில் பணத்தைத் திருப்பித் தருவதாகவும்அன்னா ஷெர்மன் என்ற நபர் கூறியுள்ளார்.தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த லும்பா, கண்ணீருடன் சென்று போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸ் அதிகாரி, சைபர் குற்ற போலீஸ்க்கு தெரிவித்ததை அடுத்து, போலீசார் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
மார் 28, 2025 07:32

இவருக்கு ஒரு தயிர்சாத பாக்கெட் பார்சல்.


Raghavan
மார் 28, 2025 06:43

பேராசை பெரு நஷ்டம்.


N Annamalai
மார் 28, 2025 06:43

அருமையாக யோசித்து யோசித்து செய்துள்ளார்கள் .கடிகாரம் வரவில்லை என்னும் பொது எச்சரிக்கையாக இருந்து இருக்கலாம் .


Anantharaman Srinivasan
மார் 27, 2025 22:24

முழு பைத்தியகாரன். எப்படித்தான் பைலட்டாக இருந்தாரோ..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை