உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா டாக்டர் கொலை: மருத்துவக்கல்லூரி டீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை

கோல்கட்டா டாக்டர் கொலை: மருத்துவக்கல்லூரி டீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கவங்கம் மாநிலம் கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் , மருத்துவமனை டீன் உள்ளிட்ட சிலருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன், சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் சுஹிர்தா பால் உள்ளிட்ட சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்திய மருத்துவக்கல்லூரி டீன் சந்தீப் கோஷ் உள்ளிட்ட 4 பேருக்கு பாலிகிராப் எனப்படும் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பல்லவி
ஆக 24, 2024 00:06

கணக்கில்லாத மரணங்கள் கண்டும் காணாமல் விடப்பட்டு போயிற்று அத்தோட இதுவும் ஒன்றாகிவிடுமோ??


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 23, 2024 12:46

இதெல்லாம் தேவையில்லாத வேலை. நீங்கள் எப்படி எப்படியோ விசாரணை செய்து சாட்சியங்கள் எல்லாம் கொண்டு போய் கோர்ட்டில் நிறுத்தினால் மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் குறுக்கு கேள்வி கிறுக்கு கேள்வி எல்லாம் கேட்டு விடுதலை செய்து விடுவார்கள். அதற்கு நமது வக்கீல்கள் துணை போய் வாதாடி விடுதலை வாங்கி கொடுப்பார்கள். அதற்கு மேலாக நமது அரசியல் வாதிகள் புகுந்து விடுதலை வாங்கி கொடுத்து விடுவார்கள். இதற்கு உதாரணம் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை. ராஜீவ் காந்தி கொலை வழக்கை எவ்வளவு சாதுரியமாக விசாரித்து சாட்சியங்கள் இல்லாத நிலையில் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பத்திரிகை நிருபர் கேமராவை சம்பவ இடத்தில் கண்டெடுத்து சிபிஐ வசம் ஒப்படைத்து பின்னர் அந்த கேமராவை வைத்து துப்பு துலக்கி தற்போது உள்ள நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முழுமையாக கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தால் கொலையுண்டவர் குடும்பம் அவரது கட்சியினரே பதவி சுகத்துக்காக கூட்டு சேர்ந்து கொலையாளிகளை விடுதலை செய்து விட்டனர். ஆகவே இங்கும் மம்தா தன் பதவியை காப்பாற்றி கொள்ள நியாயம் தருமம் எல்லாம் பார்க்க மாட்டார். இதை ஒன்றும் இல்லாமல் நமத்து போகச் செய்து விடுவார். இதுவே சமூக விரோதிகளுக்கு சாதகமாக்கி விடுகிறது. பின்னர் அதே சமூக விரோதிகள் அரசியல் வாதிகளுடன் நெருக்கமாகி அரசியல் வாதிகளுக்கும் தேவையான தில்லுமுல்லு மிரட்டல் வேலைகள் எல்லாம் செய்து தாதாவாகி பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். நமது பாழாய் போன ஜனங்கள் இதை யெல்லாம் மறந்து அந்த சமூக விரோதி அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து அவர்களை நல்ல விதமாக வைத்து கொண்டு அந்த அரசியல் வாதிகள் தரும் இலவசங்கள் மற்றும் தேர்தல் பொழுது கிடைக்கும் ஐநூறு ஆயிரத்து அந்த சமூக விரோத அரசியல் வாதிகளிடம் கையேந்தி நின்று எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இது தான் இந்தியா ஜனநாயகம்.


Swaminathan L
ஆக 23, 2024 10:30

இந்த விவகாரம் பல்லாண்டுகளாக நடக்கும் இன்னும் பல குற்றங்கள், மோசடிகள், தில்லுமுல்லுகள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வரும். சோடியம் பெண்டதால் கொடுத்து இவர்களை சகல உண்மைகளையும் கக்க வைக்க வேண்டும்.


Swaminathan L
ஆக 23, 2024 10:30

இந்த விவகாரம் பல்லாண்டுகளாக நடக்கும் இன்னும் பல குற்றங்கள், மோசடிகள், தில்லுமுல்லுகள் என்று பலவற்றையும் வெளிக் கொண்டு வரும். சோடியம் பெண்டதால் கொடுத்து இவர்களை சகல உண்மைகளையும் கக்க வைக்க வேண்டும்.


gmm
ஆக 23, 2024 06:59

சஞ்சய் கைது. யார் இவர்? டாக்டரை கொலை செய்யும் அளவிற்கு முன் பகை? இறப்பு பற்றி போலீஸின் மாறுபட்ட தகவல் தாமத முதல் தகவல் அறிக்கை. இதில் போலீசார் பயனாளி இல்லை. மாறுபட்ட தகவல் கூற சொன்ன அதிகார வர்க்கம் யார்? டீன் மீது ஊழல் குற்றம். பெண் புகார் உண்டா? உள்ளூர் போலீஸ் கொடுக்கும் தகவல் அடிப்படையில் சிபிஐ விசாரிக்க கூடாது. மாநில நிர்வாகம் வழக்கில் பங்கு கொண்டு விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன? கபில் வழக்கை வரிசை படுத்தி விவாதிக்க வில்லை. கபில் வழக்கை திசை திருப்பி வருகிறார். உண்மை கண்டறியும் சோதனை முதலில் போலீஸ் மற்றும் கபிலுக்கு தேவை. நியாயமான தீர்வு காண்பது கடினம்.


Naga Subramanian
ஆக 23, 2024 05:10

உள்ளங்கைப்புண்ணுக்கு கண்ணாடி போல, இவன்தான் முக்கிய குற்றவாளி என தெரிந்தும், ஏன் இந்த உண்மை கண்டறியும் சோதனை? இந்த சோதனை முடிந்தபின்பு, அதை பற்றிய எந்த சத்தமும் இருக்காது. காலங்கள் எப்பொழுதும் போல, பல உருண்டோடுவதை நாம் அனைவரும் பார்க்கலாம். அதுதான் அரசியல்.


Bala
ஆக 23, 2024 02:22

உடனே அதை அறுத்து சிறையில் வாழ் நாள்களுக்குப் போடவும் அவன் பார்வையே சரியில்லை.


lana
ஆக 22, 2024 23:07

அதை மமதா க்கு செய்தால் வழக்கு உடனடியாக முடிவு


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 22, 2024 21:17

சாதாரண பிக்பாக்கெட் கைதியை உள்ள வச்சு நொங்கு நொங்குனு குத்துவானுக. இந்த மாதிரி பெரிய தப்பு பன்ணுணவனுக்கு உண்மை கண்டறியும் சோதனை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை