உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா

மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா

வெளியிலே விடாது மழை துாறுகிறதா? ஏதாவது மொறுமொறு என சாப்பிட ஆசை பிறக்கிறதா? ருசியான ஒரு மாலை நேர பலகாரம் தான், அரிசி மாவு போண்டா.

செய்முறை

▶ மிக்சியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.▶ ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் பொருட்களை சேருங்கள்.▶ வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.▶ வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின்பு, உருண்டைகளை எண்ணெயில் போடவும். அடுப்பு தீயை மீடியமாக எரிய விடவும்.▶ உருண்டைகள் வெந்து, பொன்னிறமாக மாறும் எடுங்கள்.▶ அரிசி மாவு போண்டா ரெடி. இதனுடன் சட்னி அல்லது சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை