மேலும் செய்திகள்
கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
16-Aug-2025
புதுடில்லி:மின்சார ரிக் ஷா கவிழ்ந்து, 8 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார். டில்லி மவுஜ்பூரைச் சேர்ந்த பெண், மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் 8 வயது மகளை, 27ம் தேதி காலை ஷாஹ்தாராவில் உள்ள பள்ளிக்கு வாடகை மின்சார ரிக் ஷாவில் அழைத்துச் சென்றார். ஜாப்ராபாத் சவுக் அருகே சென்ற போது முன்னால் சென்ற பைக் மீது மோதி ரிக் ஷா கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டவுடன் ரிக் ஷா டிரைவர் தப்பி ஓடினார். அங்கிருந்த மக்கள் உதவியுடன் மகளை மீட்ட தாய், குரு தேவ் பகதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவல் அறிந்து வந்த ஜாப்ராபாத் போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த ரிக் ஷாவை கைப்பற்றினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரிக் ஷா டிரைவரான பாபர்பூரில் வசிக்கும் ஷாஹன்வாஸை நேற்று கைது செய்தனர்.
16-Aug-2025