உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கலவரம்: 150 பேர் கைது

வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கலவரம்: 150 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனிடையே, உயிருக்கு பயந்து அங்குள்ள ஹிந்துக்கள் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.வக்ப் சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடந்து வருகிறது. இதில் முர்ஷிதாபாத் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d23hd4gc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்துடன் சுடி, துலியான், சாம்செர்கன்ஜ் மற்றும் ஜான்கிபூர் உள்ளிட்ட பகுதிகளும் பாதிப்பைச் சந்தித்து உள்ளன. இங்கு அரசு வாகனங்கள், பொதுச் சொத்துகள் உள்ளிட்டவை அடித்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கல்வீச்சு சம்பவங்களில் பல போலீசார் காயமடைந்து உள்ளனர். இந்த கலவரம் காரணமாக 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

டிஜிபி பேட்டி

கலவரம் தொடர்பாக மாநில டிஜிபி ராஜீவ் குமார் கூறியதாவது: எந்த குண்டர்களையும் , சமூக விரோதிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டாம் என போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டத்துடன் துவங்கிய இந்த போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டது. பிறகு, அது மத ரீதியில் சென்றது எனக்கூறினார்.

மத்திய போலீஸ் பாதுகாப்பு

கலவரம் நடந்த பகுதிகளில் நிலைமை மோசமாகவும், கடுமையானதாகவும் உள்ளதாக தெரிவித்து உள்ள கோல்கட்டா ஐகோர்ட், அங்கு பாதுகாப்பு பணியில் மத்திய படை போலீசாரை நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.இந்த உத்தரவுக்கு கவர்னர் சிவி போஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். ஐகோர்ட் சரியான நேரத்தில் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக அவர் கூறியுளளார்.

பா.ஜ., குற்றச்சாட்டு

பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், '' 400க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேற்கு வங்கத்தில் மத ரீதியில் துன்புறுத்தப்படுவது உண்மையில் நடக்கிறது. திரிணமுல் காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியல், பிரிவினைவாத சக்திகளுக்கு தைரியம் அளித்து உள்ளது. ஹிந்துக்கள் வேட்டையாடப்படுகின்றனர். சொந்த மண்ணிலேயே அவர்கள் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

nagendhiran
ஏப் 14, 2025 05:40

விணை விதைத்தால் விணைதான்"அறுக்க முடியும்


மீனவ நண்பன்
ஏப் 14, 2025 02:10

CRPF BSF மற்றும் ராஷ்ட்ரிய rifle சேர்ந்த அக்னிவீர்களை தங்கவைத்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்


Kumar Kumzi
ஏப் 14, 2025 00:10

உலகமே காறித்துப்பும் மூர்க்க காட்டுமிராண்டி பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லுங்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 21:23

கேரளா , தமிழகம் , மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இருண்ட ஆட்சிக்காலத்தில் உள்ளன ..... அங்கெல்லாம் மூர்க்கர்கள் இனி தலையெடுப்பார்கள் .... ஹிந்துக்கள் விரட்டப்படுவார்கள் .....


பெரிய ராசு
ஏப் 14, 2025 00:11

தமிழகத்தில் தலையெடுத்தல் தலை எடுக்கப்படுவார்கள்


Keshavan.J
ஏப் 13, 2025 21:22

டீச்சர்ஸ் உண்ணாவிரதம் முறியடிக்க இந்த செயலை மமதா நடத்துகிறார். அவருக்கு சில பல உயிர் சேதம் பொருள் சேதம் பொருட்டாய் அல்ல. மனசாட்சி இல்லாத பதவி வெறி பிடித்த அரசியல்வாதி


sankaranarayanan
ஏப் 13, 2025 20:57

இந்த மாநிலங்களில் ஆளுகின்ற அரசின் முதல்வர் ஹிந்து என்ற போர்வையில் முஸ்லிம்களை தூண்டிவிட்டு ஹிந்துக்களின் வீடுகளில் அராஜகம் செய்ய சூறையாட தூண்டிவிட்டிருக்கிறது மணிலா அரசு மக்களுக்குக்கு அங்கே பாதுகாப்பு கொடுக்கவில்லை அங்கே உடனே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் மதம் பிடித்த மமதையே ஆர்பாட்டக்கார்களுக்கு அதிக சலுகைகள் கொடுத்து ஆர்பாட்டத்தையே தூண்டி விட்டிருக்கிறார்கள்.உச்ச நீதி மன்றம்தான் மக்களுக்கு உதவ வேண்டும்


Ramesh Sargam
ஏப் 13, 2025 20:50

அந்த மதத்தினரின் வாக்குகளை பெற மமதாவே அவர்களை தூண்டி, சீண்டி இந்த கலவரத்தை செய்வதுபோல சந்தேகம் எழுகிறது. மமதா சாமானியப்பட்டவர் அல்ல.


sridhar
ஏப் 13, 2025 20:24

மாநில அரசே கலவரத்துக்கு ஆதரவு . அடுத்த வருடம் தேர்தல். மம்தாவுக்கு முஸ்லீம் வாக்கு தேவை. தமிழகம் , மே வங்கம் , கேரளம் இங்கெல்லாம் சொரணை கெட்டவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவு , பிஜேபிக்கு எதிர்ப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை