உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்!

சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை; பாகிஸ்தான் பெயருடன் இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி போட்டோக்கள் வெளியாகி உள்ளது.கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்.19ல் தொடங்குகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுத்ததால், இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது. இந் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை வீரர்கள் அணிந்தபடி இருக்கும் போட்டோக்களை ஐ.சி/சி., வெளியிட்டு உள்ளது.கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, அர்ஷதீப் சிங் ஆகியோர் ஜெர்சி அணிந்திருக்கும் போட்டோக்கள் ஐ.சி.சி., எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. முதலில் பாகிஸ்தான் இலச்சினையை போட இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது, பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை வீரர்கள் அணிந்துள்ளனர். ஐ.சி.சி., விதிகளை கடைபிடிப்போம் என்று பி.சி.சி.ஐ., தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.முன்னதாக, இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று அறிவிக்கப்பட்ட தருணத்தில், அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்திய தேசியக்கொடி புறக்கணிக்கப்பட்டு இருந்தது நினைவிருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramaraj P
பிப் 19, 2025 07:16

தன் நாட்டு மக்களையே குண்டு வைத்துக் கொல்வான்


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 17:39

பாகிஸ்தான் என்றால் முஸ்லிம்கள் அவர்கள் தங்களுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார்கள் அதுவே நாம் செய்தால் அது தவறு மத நல்லிணக்கம் இல்லை சகிப்புத்தன்மை இல்லை என்று நம்மை குறை கூறுவார்கள் இவ்வளவு தான் தெரிந்தவர்கள் முஸ்லிம்கள்


சமீபத்திய செய்தி