உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிக்கு கிடைத்த ராஜமரியாதை

ஆந்திரா போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிக்கு கிடைத்த ராஜமரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திராவில் கைதான ரவுடிக்கு, போலீஸ் ஸ்டேஷனில் சகல வசதியுடன் ராஜமரியாதை செய்தது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, எஸ்.ஐ., உட்பட ஏழு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அனில்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர், சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். தெலுங்கு தேசம் கட்சியினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அனில் குமாரை போலீசார் கைது செய்தனர். ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் வேறொரு வழக்கு விசாரணைக்காக மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். லாக் - அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அனில் குமாருக்கு, போலீஸ் ஸ்டேஷனில் ராஜ மரியாதை அளிக்கப்பட்டது.அவர் படுப்பதற்கு பாய், தலையணை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்ததாகவும் போலீசார் மீது புகார் கூறப்பட்டது. அனில் குமார், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகளும், போலீஸ் ஸ்டேஷனில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகின. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, ராஜமகேந்திரவரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து குண்டூர் எஸ்.பி., சதிஷ்குமார் நேற்று கூறுகையில், ''அனில் குமாருக்கு சுவாச கோளாறு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதால், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ''இதைத் தொடர்ந்து அவருக்கு படுக்கை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மற்றபடி ராஜமரியாதை உபசரிப்பு எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Bhaskaran
நவ 12, 2024 09:59

சின்னம்மா ஜெயிலில் இருக்கும் போது ஷாப்பிங் போகலியா. இவர் உள்ள தானே சௌகரியம் அனுபவிக்கிறாரு


Ramesh Sargam
நவ 11, 2024 12:29

இதெல்லாம் ரொம்ப சகஜம் இந்தியாவில். பெங்களூரில் சிறையில் உள்ள ஒரு பிரபல திரைப்பட நடிகருக்கு மொபைல் போன் வசதி, சிகரெட், மற்றும் பலவிதமான வசதிகள் செய்துகொடுக்கிறார்கள் இங்குள்ள சிறை அதிகாரிகள். என்னத்த சொல்ல...


Anantharaman Srinivasan
நவ 11, 2024 10:20

ராஜமரியாதை செய்யவில்லை என்றால் எதற்காக சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


Nallavan
நவ 11, 2024 10:13

நடந்தது ஆந்திராவில் மணிக்கு மணி புரிய வைக்க வேண்டி இருக்கிறது


Dharmavaan
நவ 11, 2024 07:37

காவல் துறை ஊழல்துறையாகிவிட்டது


Mani . V
நவ 11, 2024 05:38

தமிழ்நாட்டில் நம்ம ஐந்து கட்சி அமா........சைக்குக் கூட ராஜமரியாதைதான் கொடுக்கப்பட்டது.


Kasimani Baskaran
நவ 11, 2024 04:38

தமிழகம் அல்லது கர்நாடகம் என்றால் சிறைச்சாலையில் இது போன்ற மரியாதை கிடைக்கும்.


J.V. Iyer
நவ 11, 2024 04:25

எல்லா காவல்நிலயங்களும் இப்படித்தானா? எல்லா காவல் துறை அதிகாரிகளும் இப்படியா? அட சே. வாழ்க்கை வெறுத்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை