உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரங்கள் நடுவே ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை: வாகன ஓட்டிகள் திக்... திக்...

மரங்கள் நடுவே ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட சாலை: வாகன ஓட்டிகள் திக்... திக்...

பாட்னா: பீஹாரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலையில் இருந்த மரத்தை அகற்றாமல் அதனை சுற்றி ரூ.100 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பயத்துடனேயே செல்கின்றனர்.பீஹாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில், பாட்னா - கயா மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 7.48 கி.மீ., தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் இருந்த மரங்கள் இடையூறாக இருந்தது. இதனையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்கு பதிலாக 14 ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறையினர் கோரிக்கை வைத்தனர். இது ஏற்கப்படவில்லை. இதனால், சாலை அமைக்க சிக்கல் ஏற்பட்டது.இதனையடுத்து மரங்களை அகற்றாமல் சாலை அமைத்து முடிக்கப்பட்டது. அந்த சாலையில் மரங்கள் நேராக இல்லாமல் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக உள்ளது. இதனால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, இந்த பகுதியில் அதிகளவு விபத்துகள் நடந்துள்ளதால், ரூ.100 கோடியில் சாலை அமைத்தும் பயனில்லை என அந்த வழியாக செல்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சாலையில் இருந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

sasikumaren
ஜூலை 03, 2025 02:43

நெடுஞ்சாலைகளுக்கு நடுவே மரங்கள் இருப்பது தான் மிக சரி வரிசையில் இல்லாத மரங்களை வேரோடு பிடிங்கி மரங்களை நேர் கோட்டில் வைக்கலாம் மரங்கள் எல்லாம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் பொய்யானது பெரிய வாகனங்களில் இருந்து வரும் புகையை உள்ளிழுத்து ஆக்சிசன் தர மரங்கள் மிக அவசியம் இருக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டு நாட்டை பாலைவனம் ஆக்கி விடாதீர்கள் பிறகு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் உடல் நலம் தான் கெடும்


S.jayaram
ஜூலை 01, 2025 09:41

இப்படி அரசுத்துறைகள் மோதிக்கொண்டால் நாட்டுக்கு தேவையான முன்னேற்றங்கள் எக்காலத்திலும் ஏற்படாது. இதுவே சீனாவாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த துறை அதிகாரிகளின் நிலை என்னவாகி இருக்கும் சிந்தியுங்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லுங்கள்


Chitrarasan subramani
ஜூலை 01, 2025 07:11

வனத்துறையின் இடத்தில் 8 கி.மி தூரத்திற்கு ₹100 கோடி ,என்ன விந்தை.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 22:07

எங்க பகுதியில் இடைஞ்சலாக ஒரு வணக்க ஸ்தலம் உள்ளதால் வெகு தூரம் சுற்றி .பயணிக்க வேண்டியுள்ளது. பல விபத்துகளுக்கு பின்பும் அதிகாரிகள் அதனை இடம் மாற்ற கோரிக்கை விடவில்லை. பயம்?.


subramanian
ஜூன் 30, 2025 19:59

மரத்தை வெட்டினால் தப்பு.... சுற்றுசூழல் பாதிப்பு... ஆ.... ஓஓஓ .... வெட்டாமல் ரோடு போட்டாலும் தவறு.... அட போங்கப்பா .... ...


ஜெகதீசன்
ஜூன் 30, 2025 22:09

சரியாக சொன்னீங்க. மரத்தை தேவைக்கு ஏற்ப வெட்டினால் கூட தேவையில்லாமல் கூப்பாடு போடுறாங்க.


D.Ambujavalli
ஜூன் 30, 2025 18:30

வாகனங்களுக்கு zig zag விளையாட்டு விளையாட்டுத்தான் இந்த சாலை அமைக்கப் பட்டிருக்குமோ என்னவோ ?


Bala
ஜூன் 30, 2025 18:09

பிஜேபி யில் இருப்புவர்களுக்கு மூளை இல்லவே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.


Yasararafath
ஜூன் 30, 2025 18:07

சாலை நடுவே மரங்களா?


Rasheed Ahmed A
ஜூன் 30, 2025 20:23

மரத்தைச்சுற்றி சாலைகள் ?


Mahendran Puru
ஜூன் 30, 2025 18:03

அமித் ஷா, ந மோடி சொர்க்க பூமி என்று அழைத்த பீகார். நாம இதெல்லாம் கண்டுக்க கூடாது.


வாய்மையே வெல்லும்
ஜூன் 30, 2025 17:47

ஆட்சியாளர்கள் வாழ்க்கையில் ஒருநாளைக்காவது பள்ளி கல்லூரியில் காலடி வைத்தார்களா என்பதே பெருத்த சந்தேகம். காமெடி ஆட்சியாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


போராளி
ஜூலை 02, 2025 09:02

பொலிடிகல் சயின்ஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை