உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துகளை விற்றதில் ரூ.15 ஆயிரம் கோடி மீட்பு: நிர்மலா சீதாராமன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'' வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது'', என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.லோக்சபாவில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மோசடியாளர்களிடம் இருந்து ரூ.22, 280 கோடி பணத்தை அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டு உள்ளது. அதில் முக்கியமான வழக்குகளை மட்டும் கூறுகிறேன்.விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நீரவ் மோடி சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1,052. 58 கோடியும்தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கழக ஊழல் தொடர்பாக பறிமுதல் சொத்துகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.17.47 கோடியும் வங்கிகளுக்கு திரும்பியது. எஸ்ஆர்எஸ் நிறுவனங்கள்- ரூ.20.15 கோடிரோஸ்வேலி நிறுவனம் - ரூ.19.40 கோடிசூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் - ரூ.185.13 கோடி நவேரா சேக் உள்ளிட்டவர்கள் - ரூ.226 கோடிநாயுடு அம்ருதேஷ் ரெட்டி- ரூ.12.73 கோடிமெகுல் சோக்சி - ரூ.2,565.90 கோடிநபிசா ஓவர்சீஸ் உள்ளிட்டவர்கள்- ரூ.25.38 கோடி வங்கிகளுக்கு திரும்பி உள்ளது.பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடவில்லை என்பது முக்கியமான விஷயம். வங்கிகளில் இருந்து சென்ற பணம், மீண்டும் வங்கிகளுக்கே திரும்பும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.பல வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெகுல் சோக்சி, தற்போது ஆண்டிகுவாவில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Easwar Kamal
டிச 18, 2024 22:45

இவ்வளவுதான் தேருச்சா? இதுக்கு மேல உள்ள அமௌன்ட் உங்க பிஜேபி கஜானாவுக்கு போயிருச்சா? அப்படி என்றல் இவனுங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவன் aiyruvanungalae


Balasubramaniam
டிச 18, 2024 18:54

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்


VENKATASUBRAMANIAN
டிச 18, 2024 18:25

எங்கே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதைப்பற்றி பேசாதே. போலி பத்திரிகை யாளர் அரசியல் விமர்சகர்கள் எங்கே போனார்கள்.


sankaranarayanan
டிச 18, 2024 18:22

பரவாயில்லை மோடி ஆளும்போது ஓரளவு பொருளாதாரகுற்றவாதிகளிடமிருந்து அரசு வசூல் செய்து விடுகிறார்கள் இதே காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஒரு பைசாகூட அவர்களிடமிருந்து வசூல் செய்யவே இல்லை குற்றவாளிகளுக்கு உறுதுணையாகவே அவர்கள் இருந்துள்ளனர் இதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது


Jay
டிச 18, 2024 17:20

வட்டிக்கு கடன் கொடுப்பவர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் மால்யா நீரவ் போன்றவர்கள் விஷயத்தில் தவறு எங்கு நடந்தது என்று தெரியும். கடன் கொடுக்கும் பொழுது அனைத்தையும் பார்த்து கணித்து கொடுக்க வேண்டும். கடன் கொடுத்த பிறகு திரும்ப வரவில்லை என்றால் அது கொடுக்கும் போதே செய்யப்பட்ட தவறு தான். கடன் வாங்கியவன் ஓடிப் போய்விட்டான் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டான் என்று பிறகு புலம்பி பிரயோஜனம் இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. திருடி சென்றவர்கள் திருடி சென்ற பணத்தைக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக கேஸ் நடத்திக் கொண்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் வெளிநாடுகளில். பிஜேபி ஆட்சியில் தேசிய வங்கிகளில் வாராக் கடன்கள் பெருமளவு குறைந்துள்ளது. பங்கு சந்தையில் தேசிய வங்கிகளின் பங்கு மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி.


Barakat Ali
டிச 18, 2024 17:18

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் போனது போனதுதான் ..... இழந்தவை இழந்ததுதான் .... காங்கிரஸ், திமுகவின் பக்தர்கள் நகர்வாலா ஊழல் பற்றி அறியாதவர்களா ? அல்லது நடிக்கிறார்களா ?


KRISHNAN R
டிச 18, 2024 17:07

அதெல்லாம் சரி. நாங்க எங்க போனாலும் ஜிஎஸ்டி வருதே அதான் வருத்தமா இருக்கு


பல்லவி
டிச 18, 2024 16:33

அது அ1அ2அ3 பிரித்து கொடுத்தாச்சு


Madras Madra
டிச 18, 2024 16:32

இது பெரும் சாதனை ஆனா பாராட்ட மனம் இல்லாமே குதர்க்கம் பேசுவாங்க நண்டுகள்


Sidharth
டிச 18, 2024 16:26

போனது பரங்கிக்காய் வந்தது சுண்டைக்காய் விஸ்வகுரு ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா


K Subramanian
டிச 18, 2024 19:22

பரங்கிகாய் கொடுத்தது யாரு ? சுண்டைக்காயாவது வருதுல இந்த ஆட்சி மூலம்.


முக்கிய வீடியோ