உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.1,600 கோடி நிவாரணம் போதாது: ராகுல்

பஞ்சாப் மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.1,600 கோடி நிவாரணம் போதாது: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி முதற்கட்ட நிவாரணம் அறிவித்திருப்பது அநீதி என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் விமர்சித்துள்ளார். மேகவெடிப்பு மற்றும் பருவமழை காரணமாக பெய்த கனமழையால் பஞ்சாப் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.1,600 கோடியை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்தார். இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வைட்ட லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சேதமடைந்த சாலைகள், பாலங்களை புதுப்பித்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், அந்தப் பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது; வெள்ளத்தால் பஞ்சாப்பில் ரூ.20,000 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி ரூ.1,600 கோடியை முதற்கட்ட நிவாரணமாக அறிவித்து, பஞ்சாப் மக்களுக்கு அநீதியை இழைத்துள்ளார். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பஞ்சாப் மக்கள் மீண்டும் தங்களின் சொந்தக்காலில் நிற்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு ஆதரவும் பலமும் மட்டுமே தேவை. உடனடியாக ஒரு பெரிய நிவாரண நிதியை அறிவிக்குமாறு பிரதமரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
செப் 23, 2025 12:27

மத்தியில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது இப்படி பட்ட சூழ்நிலையில் எத்தனை கோடி நிதி ஒதுக்கியது என்று ஒரு வெள்ளை அறிக்கையாக பாஜக தலைமை வெளியிட்டு காங்கிரஸ் வின் போலியான முகத்திரையை கிழிக்க வேண்டும்


Bhakt
செப் 22, 2025 23:42

ராகுல் காண்டு ஹை பார் டான்ஸ் திவிடியல் புத்ர் ஹை


Modisha
செப் 22, 2025 23:27

மீதி எவ்வளவு தேவையோ அதை நீங்க அடிச்ச பணத்தில் இருந்து கொடுங்க


சாமானியன்
செப் 22, 2025 22:25

நம்ம ஊர் சேகர்பாபு மாதிரி ராகுலும் தனது கருத்துக்களை அடித்து விடுகிறார்.பஞ்சாப் முதலமைச்சர் இதுவரை எதுவுமே பேசவில்லை. எவ்வளவு தேவை என்பதை கேட்டுப் பெறலாமே. இல்லாவிட்டால் கடன் வாங்குங்கள். அப்போது வட்டி கட்டும் போது புத்தி வரும்.


SVR
செப் 22, 2025 20:58

பாக்கி பணத்த இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சி கொடுக்கட்டும்.


Anonymous
செப் 22, 2025 20:12

முதல்ல குறை சொல்லணும், அப்புறம் தான் என்ன விஷயம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்குவாறு நம்ம தலை.......


Vasan
செப் 22, 2025 22:06

That is called non-linear story telling in cinema industry.


Indian
செப் 22, 2025 20:05

உத்திரகாண்ட் ஹிமாச்சல் மாநிலங்களிலும் மும்பை போன்ற நகரங்களிலும் மழையால் அதிக சேதங்கள் ..காங்கிரஸ் நிதி வசூலித்து உதவலாமே


MUTHU
செப் 22, 2025 19:56

துட்டு கொடுக்க மட்டும் மத்திய அரசு வேண்டும். வேறு எதற்கும் வேண்டாம்.


A viswanathan
செப் 22, 2025 19:33

பஞ்சாப் மக்களின் மீது கரிசனம் இருந்தால். உன் குடும்பம் கொள்ளை அடித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து சிறிது கொடு உனக்கு


Barakat Ali
செப் 22, 2025 19:29

தலைமுறையாக அடித்து சேர்த்த சொத்தில் இருந்து கொஞ்சம் கொடுக்கலாமே ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை