உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி : ஹரியானாவில் அள்ளி விடுது காங்கிரஸ்!

பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி : ஹரியானாவில் அள்ளி விடுது காங்கிரஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ''ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்குவோம். முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பென்சன் வழங்கப்படும் ,'' என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.ஹரியானா சட்டசபைக்கு அக்., 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:*ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி*18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். காஸ் சிலிண்டர் மானியமாக ரூ.500 வழங்குவோம்.*மாநிலத்தில் காலியாக உள்ள ரூ.2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம்.*முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை பென்சன் ஆகியவை ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படுவதுடன், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.*மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். கிரீமி லேயருக்கான வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிப்போம்.*விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.*ஏழைகளுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்பு இலவச வீடு வழங்குவோம் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
செப் 19, 2024 07:50

எப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று.... திருட்டு மாடல் ஆட்களிடம் இருந்து படித்து விட்டார்கள் போல் தெரிகிறது.... மகளை ஏமாற்றும் செயலில்.... ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை !!!


Sivak
செப் 18, 2024 21:56

ஆண்களுக்கு ஏன் மாதம் 2 ஆயிரம் கிடையாது ... ஆண்களுக்கும் குடுக்க வேண்டும் என்று எதிர் தரப்பில் ஆரம்பிக்க வேண்டும் ....


Sivak
செப் 18, 2024 21:54

மக்கள் வரிப்பணத்தை எடுத்து இலவசம் என்ற வாக்குறுதி ஓட்டுக்காக.. நாதாரித்தனம் .... இதை தேர்தல் கமிஷன்.. மத்திய அரசு.. நீதி மன்றம் ஆகியவை தடுக்கவில்லை என்றால் நாடு நாசம் ஆகி விடும் ... .. மக்கள் சிந்திக்க வில்லை என்றால் பால் விலை உயர்வு . பஸ் கட்டண உயர்வு ... மின்சார கட்டண உயர்வு .. பத்திர பதிவு கட்டண உயர்வு ... திருட்டு திராவிடத்தால் அனுபவிப்பது போல் அனுபவிக்க வேண்டும் ...


V RAMASWAMY
செப் 18, 2024 19:57

1. ஹிமாச்சல் பிரதேசம் 2 ஹரியானா நடந்தால் 3 கர்நாடகாவும் தமிழகமும் லிஸ்டில் இருக்கலாம்.


Anu Sekhar
செப் 18, 2024 19:49

என்ன சொல்கிறார்கள் என்றால் , ஒரு வருடத்திற்குள் ஹரியானவை திவால் ஆக்கிவிடுவோம். மாத சம்பளம், பென்ஷன், இலவசம் கொடுக்க காசு இருக்காது . எல்லோரும் ஈரத்துணியை வயற்றில் கட்டிக்கொண்டு பட்டினி கிடப்போம் நல்ல திட்டம்


Narayanan Muthu
செப் 18, 2024 19:46

ஒரிஸ்ஸாவில் வருடத்திற்கு 10000 இலவச திட்டம் அமல்படுத்தியபோது இந்த கதறல்கள் எங்கேபோனது. எல்லோரும் அப்போது தூங்கி இருப்பார்களோ.


M Ramachandran
செப் 18, 2024 19:45

சீனா பாகிஸ்தான் அமெரிக்கர்களின் அடி வருடிகள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தாலியா அடி வருடிகள்.


GMM
செப் 18, 2024 19:25

நீதி மன்றம் தடுக்க வேண்டும். அல்லது இலவச மாநிலத்தில் வரி விருப்பம் போல் செலுத்த தனி நபருக்கு அனுமதி. அல்லது வரி செலுத்தும் நபர் விரும்பும் ஏழை நபருக்கு உதவி வரி விலக்கு பெற தகுதி. நாடாளுமன்றம் , மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.


sridhar
செப் 18, 2024 19:23

நாட்டையே நாசம் செய்யும் இலவச பணத்துக்கு மூல காரணம் திமுக .


yts
செப் 18, 2024 19:00

தமிழ்நாட்டில் போல் பாட புத்தகங்களை விலை உயர்வு வீட்டு வரி உயர்வு தொழில்வரி பஸ் கட்டணம் எல்லாவற்றிலும் கை வைத்தால் சரியாகிவிட்டது


சாமிநாதன்,மன்னார்குடி
செப் 18, 2024 19:25

இந்த சீரழிவுக்கெல்லாம் மூல காரணம் திராவிட மாடல் கட்டுமர கட்சிதான் என்பதில் சந்தேகமில்லை!


முக்கிய வீடியோ