உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிருக்கு மாதம் ரூ.2,100: ஜார்க்கண்ட் பா.ஜ., வாக்குறுதி

மகளிருக்கு மாதம் ரூ.2,100: ஜார்க்கண்ட் பா.ஜ., வாக்குறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: 'ஜார்க்கண்டில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்' என, அக்கட்சி வெளியிட்டுள்ள முதற்கட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநில பா.ஜ., தலைவர் பாபுலால் மராண்டி, கட்சியின் தேர்தல் அறிக்கையாக ஐந்து வாக்குறுதிகளை முதற்கட்டமாக நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் பா.ஜ., வென்றால் மகளிருக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இரண்டு வீடு கட்டித்தரப்படும். ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது தவிர, சிலிண்டர், 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 09:31

காங்கிரஸ் முக்த் பாரத் என்று முழங்கியவர்கள், அதே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று அஞ்சி இலவசங்களை அறிவிக்கும் அவலம் ......


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 09:29

இலவசங்களால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று உண்மையைப் புரிந்து கூறிய பாஜக பொறுப்பற்ற கட்சியாக ஆகிவருகிறது ......


பாமரன்
அக் 06, 2024 07:12

ரெண்டு வீடு வச்சிக்கிட்டு என்ன பன்றதாம்...அதனால ரெண்டு பொண்டாட்டிகள் அல்லது ரெண்டு புருஷன்கள் கட்டித்தரப்படும்னு அடுத்த தேர்தல் அறிக்கையில் எதிர்பார்க்கப்படுகிறது... என்ன உளறினாலும் சப்போர்ட் பண்ணி டீம்கா காங் அவுரங்கசீப் தான் எல்லாத்துக்கும் காரணம் அப்பிடின்னு எழுத பகோடாஸ் இருக்கும் போது ஏன் கவலை... எடுத்து விடுங்க..


சாண்டில்யன்
அக் 06, 2024 07:00

தமிழ்நாடு அரசு என்றாலே மோசம் அழிக்கும் வரை ஓயமாட்டேன் என்றார் பிரதமர் மகளிர் உரிமை திட்டம் கொண்டுவந்து செயல் படுத்தினார் ஸ்டார் லின் அதை பல மாநிலங்கள் பின் பின்பற்றுகின்றன சிகரம் வைத்தாற்போல இலவசங்கள் தந்தால் இலங்கைபோல திவாலாகும்ன்னு சொன்ன பிஜேபியும் அந்த திட்டத்தை கொண்டுவருவோம் என்று தேர்தலுக்காக சொல்வது வெட்கக்கேடு


Rajan
அக் 06, 2024 06:34

இதையெல்லாம் எப்படி அதிக வரி விதிக்காமல் செயல்படுத்த போகிறார்கள் என்று விளக்க உச்ச நீதிமன்றம் கேள்வியாவது கேட்க வேண்டும். போலி வாக்குறுதிகளை தடுக்க சட்ட திருத்தம் அவசியம் அவசியம். மாநிலங்கள் கடன் வாங்குவதை மத்திய அரசு கடுமையாக தடுக்க வேண்டும், இல்லையேல் அவை திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். நாட்டுக்கு களங்கம் தான் மிஞ்சும்


ஜமீலா
அக் 06, 2024 05:09

அதென்ன நூறு எக்ஸ்ட்ரா? சரக்கு வாங்குனா தொட்டுக்க ஊறுகா வாங்கறதுக்கா? ஐடியா நல்லாருக்கு.


Ram Siri
அக் 06, 2024 06:58

நீ யார் என்று தெரியுமே...பேர பாரு


சமீபத்திய செய்தி