மேலும் செய்திகள்
ஹால்மார்க் இல்லாத நகைகள் பறிமுதல்
31-Oct-2024
கொச்சி : கேரளாவில் நகைக்கடை அதிபர் சென்ற ஸ்கூட்டர் மீது காரை மோதச் செய்து விபத்து ஏற்படுத்திய கும்பல், அவர் மீது பெப்பர் ஸ்பிரே தெளித்து, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளைஅடித்து சென்றனர்.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா பகுதியைச் சேர்ந்தவர் யூசுப், 50; நகைக்கடை அதிபர். இவரது சகோதரர் ஷாநவாஸ். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு யூசுப்பும், ஷாநவாசும் தங்க நகைகளை ஒரே ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றனர். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், யூசுப் வீடு அருகே அவரது ஸ்கூட்டர் மீது காரை மோதியது. பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் இருவரையும் தாக்கியதுடன், பெப்பர் ஸ்பிரேயை யூசுப் மீது தெளித்தது. இதில், நிலைகுலைந்த யூசுப்பிடமிருந்து, 3.5 கிலோ எடையுள்ள தங்க நகை அடங்கிய பையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றது. வழிப்பறி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நால்வரை கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய் என்றும், அந்த நகை இதுவரை மீட்கப்பட வில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
31-Oct-2024