உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 ஆயிரம் கோடி மோசடி: டில்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ரூ.5 ஆயிரம் கோடி மோசடி: டில்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவமனை கட்டுவதில் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லியில் கடந்த 2018-19ம் ஆண்டில் அரசு 24 மருத்துமனைகளை கட்டுவதற்கு ரூ.5590 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஐசியுக்கள் உட்பட இந்த மருத்துவமனைகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் இந்த திட்டம் முடிக்கப்படாமல் உள்ளன. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=px7z951w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, ஆம்ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்தேயந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. டில்லி 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anantharaman Srinivasan
ஆக 26, 2025 15:29

இதேபோல் இரண்டு Medical college மருத்துவமனை ஆரம்பிக்க அன்புமணி ராதாஸ் அமைச்ராகயிருந்தபோது Permission கொடுத்து மாட்டிக்கொண்ட கேஸ் File ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறது..?


Narayanan
ஆக 26, 2025 14:37

அமலாக்கத்துறை குற்றவாளிகளை கொண்டு உச்சநீதிமன்றத்தில் நிறுத்தினால் நீதிபதி உடனடியாக ஜாமீ னோ / வழக்கை தள்ளுபடியோ செய்து விடும்போது அமலாக்கத்துறை என்ன பாடுபட்டு என்ன பயன் ?


அப்பாவி
ஆக 26, 2025 13:12

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டி ஏழு வருஷம் ஆச்சு. கேள்வி கேப்பார் இல்லை.


Mettai* Tamil
ஆக 26, 2025 13:59

ஊழல் ஆரம்பித்து 60 வருஷஆலமரமாகி விட்டது . ஓட்டு போட ஊழல் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேப்பார் இல்லை.


N Sasikumar Yadhav
ஆக 26, 2025 14:23

நீங்க கோமாவிலிருந்து இன்னும் விழிக்கவில்லையா


M Ramachandran
ஆக 26, 2025 12:20

புற்றீசல் போல் உத்தமர் போல் மக்களிடம் வேடம் கட்டி மேடையில் கை காலை ஆட்டி ஒரு சிலர் சுய நலத்திற்கு கட்சி ஆரம்பித்து பெரியளவில் மக்கள் பணத்தை சுருட்டி சுகபோக வாழ்க்கையை நடத்த திட்ட மீட்டு கடையசியில் எலி பொரியில் மாட்டி திரு திரு வேன்று முழித்து கொண்டு முடிந்தால் மறைய்யந்து ஓடி வெளி நாடுகளுக்குத்தப்பா முயற்சிப்பார்கள். அதெல்லாம் இனி நடக்காது. ஒரு பெரிய பெருச்சாளி இப்போ கூண்டில் மாட்ட எலி பொறி தயார்.


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:42

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்


தமிழன்
ஆக 26, 2025 12:13

நேற்று பார்லிமென்ட்டில் சட்டம் இயர்ட்டப்பட்டது ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இன்று அதற்குன்னடானா வேலை நடக்கிறது


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 12:00

அருமை சூப்பர் , அடுத்த 10 தினங்களில் அந்த கம்பெனி எல்லாம் எலெக்டரால் பாண்ட் வாங்கி , ஊழலை அறவே ஒழிக்க உதவு வார்கள்


தஞ்சை மன்னர்
ஆக 26, 2025 10:48

காலையில் வெறும் டீ குடிக்கக்கூட 25000 செலவில் காளான் காலன் சூப் கிடைத்தால் விடுவோமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை