உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.6 லட்சம் லஞ்சம்: டில்லியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது

ரூ.6 லட்சம் லஞ்சம்: டில்லியில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பணி முடிக்கப்பட்டதற்கான 'பில்'களுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 6 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய பொதுப்பணித்துறையின் மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.டில்லியின் ஆர்கே புரம் பகுதியில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றும்மூத்த அதிகாரிக்கு ஒப்பந்ததாரர் ஒருவர் ரூ.6 லட்சம் லஞ்சம் கொடுக்க உள்ளதாக சிபிஐ அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரூ.1.52 கோடி மதிப்பிலான' பில்' லுக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் கொடுக்க உள்ளதாக தகவல் வந்தது.இதனையடுத்து, மூத்த பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் இடைத்தரகர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக மூத்த அதிகாரி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியாக லஞ்சம் வாங்கி வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 13, 2025 07:27

பரவாயில்லை. நாலு பர்சண்ட் லஞ்சம்தான் வாங்கியிருக்காங்க.


SANKAR
ஆக 12, 2025 22:35

Delhi ruling theeya theekuka responsible.Stalin must resign


ஆனந்த்
ஆக 12, 2025 22:28

லஞ்சம் குறைவாகத் தெரிகிறதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை